பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. காஞ்சித் திருதலப் பயணம்

தொண்டை நாட்டுத் திருப்பதிகளுள் கோயில் நகரம் fTemple City) என்று புகழ்ப்படும் காஞ்சி வரலாற்றுச் சிறப்பு பெற்றது. நம்மாழ்வார் தமது முதல் பிரபந்த மாகிய திருவிருத்தத்தில் திருவெஃகா (26), திருவரங்கம் (28), திருவேங்கடம் (31) என்ற மூன்று திருப்பதிகளை மட்டிலுமே மங்களாசாசனம் செய்தமையன்றி கோயில் திருமலை, பெருமாள் கோயில்' என்று சிறப்பித்துக் கூறப் பெற்றுள்ளதாகப் பெரியோர் பணிப்பர். இத்தலத்தைப் பற்றிப் புராண வரலாறு ஒன்று உண்டு. முத்தி தரும் ஏழு நகர்களுள் காஞ்சிபுரம் மிகவும் முக்கியமானது.

காசிமுத லாகியதன் னகரி யெல்லாம்

கார்மேனி அருளாளர் கச்சிக் கொவ்வா (நகர்-பட்டணம்; கார்மேனி-நீல நிற உடல்; கச்சி.காஞ்சிபுரம்)

என்று புகழ்வர் வேதாந்த தேசிகர். காஞ்சியில் பதினெட்டு

திவ்விய தேசங்கள் உள்ளனவாக வைணவர்களிடையே

1. தொண்டை காட்டுத் திருப்பதிகள் (கட்டுரை-1)

பக், 2-5.

2. தே. பி. 122, 237. ஏனைய ஆறு அயோத்தி, மதுரை, மாயை, காசி, அவந்தி, துவாரகை $4 ಘärt_sir,