பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சித் திருத்தலப் பயணம் 107

10. திரு அட்டடியங்கரம் : இங்கு எழுந்தருளி யிருக்கும் எம்பெருமானுக்கு எட்டு கைகள் உள்ளன. திருவாழி, திருச்சங்கு, தாமரை, வாள், கேடயம், வில், அம்பு, கதை என்ற எட்டு திவ்வியாய்த ஆழ்வார்கள் இக்கைளை அலங்கரிக்கின்றனர். ஒரு திருமொழியில் {1.8:5) எண்கையான்' என்று ஆழ்வார் குறிப்பிடும் எம் பெருமான் அட்ட புயகரத்தில் சேவை சாதிக்கும் எம் பெருமானே என்பது ஆன்றோர் கொள்கை. பெரிய திருமடலிலும் ஆழ்வார் 'அட்டபுயகரத்து எம்மான் ஏற்றை (கண்ணி-128) என்று இந்த எம்பெருமானைக் குறிப்பிடுவர்.

இவை தவிர ஒரு தனிப் பதிகத்தாலும் அட்டபுய கரத்து எம்மானை மங்களாசாசனம் செய்கின்றார். இப்

9. அட்டடியங்கரம்: அருளாளர் திருக்கோயிலை நோக்கிச் செல்லும் கீழ்-மேல் சாலைக்குத் தென் திசையில் உள்ளது இத்திவ்விய தேசம். அஷ்ட + புய + க்ருஹம் என்பன அட்டபுயகரம் என்றா

யிற்று. 'க்ரஹம் என்ற வடசொல் 'கரம்’ எனத் திரியும். ஆகவே, அஷ்டபுஜனுடைய க்ரஹம் அட்டபுயகரம் என்பது. அட்ட புய

வகரம்’ என்பது 'அட்ட புயகரம்’ என மருவிற்று எனவும் கொள்ளலாம். அகரமாவது அக்ர ஹாரம். திவ்விய தேசத்தை முன்னிட்டே எம் பெருமானைப் பேசவேண்டும் என்பது ஆழ்வார் களின் திருவுள்ளமாதலின், அட்டபுயன்’ என்று எம்பெருமானை வழங்காமல் 'அட்ட புயங்கரத் தான்’ என்று வழங்கினர் என்பது ஆன்றோர் கருத்து, எம்பெருமான் ஆதிகேசவப் பெருமாள்: நின்ற் திருக்கோல்ம்; மேற்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார் : அலர்மேல் மங்கை. இவருக்குச் தனிச் சந்நிதி உண்டு. பெரி. திரு. 2.8 (பதிக்ம்); பெரி. திருமடல் (64); மேலும் விவரம் வேண்டுவோர் இந்த ஆசிரியரின் தொ. கா. தி. என்ற நூலில் 3-வது கட்டுரை காண்க.