பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சித் திருத்தலப் பயணம் 115.

மானும் அகலகில்லேன் இறையும்’ என்ற அலர்மேல் மங்கை உறைமார்பன்'. சங்குகட்கு உறைவிடம் கடல்; எம்பெருமானும் இடக்கையில் திருவாழியைத் தரித்திருப்

Ꮮjöj☾f .

எம்பெருமானின் கோல நிறத்தில் ஊன்றிவிடுகின்றது ஆழ்வார் நாயகியின் நெஞ்சு, 'இவருடைய தன்மைகளை எந்தவிதமாக அறியப் பார்த்தாலும் ஒன்றும் அறியக்கூட வில்லையே. ஆய்ந்தெடுத்த அணிகளையுடைய மகளி ருடைய வளையல்கள், நெஞ்சு, நிறை முதலிய அனைத் தையும் தம்முடையவனாகவே ஆக்கிக் கொள்வதறகாகவே இங்கு வந்து சேர்ந்தனர் போலும்!” என்று நினைக்கத் தோன்றுகின்றது அவளுக்கு.

எங்ங்னும் நாம் இருவர் வண்ணம் எண்ணில்

ஏதும் அறிகிலம், ஏந்திழையார்

சங்கும்,மனமும், நிறைவும் எல்லாம்

தம்மன வாகப் புகுந்து (2.8.6)

|வண்ணம்-தன்மைகள், ஏந்திழையார்-மகளிர்;

சங்கு-இங்கு வளையல்கள்; நிறைவு-அடக்கம்;

தம்மனவாக-தம்முடையனவாகும்படி; புகுந்து.

வந்து சேர்ந்து! என்று எண்ணுகின்றாள் பரகால நாயகி. இவருடைய நீலமேனியோ பூவையும் காயாவும் நீலமும் மேகமும் போன்றுள்ளது. அந்தத் திருமேனியில் ஈடுபடுகின்றாள் பரகால நாயகி,

பொங்கு கருங்கடல்தாமும் பூவைகாயா

போதவிழ் நீலம் புனைந்தமேகம்

அங்ங்ணம் போன்றிவர் ஆர்கொல்? என்ன

அட்டபுயகரத் தேன்.என் றாரே. (2.8.6)

--مسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسس-سر

13. திருவாய். 6.10:10