பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗露鱗 பரகாலன் பைந்தமிழ்

எனிடத்தும் அநுசந்திக்கத் தக்கவையாக இருப்பதால் இத் தலத்திற்கு கார்வானம் என்ற திருநாமம் ஏற்பட்டதாகக் கூறுவர் பெரியோர். திருமங்கையாழ்வார் மட்டிலும்,

கார்வானத்து உள்ளாய்'

(திருநெடுந் 8)

என்ற இரு சொற்களைக்கொண்ட தொடரால் மங்களா சாசனம் செய்து மகிழ்கின்றார். நம்மிடமும் தீர்த்தமும் திருத்துழாயும் பெற்ற உணர்ச்சி எழுகின்றது. இந்த எம்பெருமான்-கள்வன்-நின்ற திருக்கோலத்தில் மேற்கு நோக்கிய திருமுகமண்டலம் கொண்டு கமலவல்லி நாச்சியா குடன் காட்சி நல்குகின்றார்.

17. வைகுண்டப் பெருமாள் சந்நிதி : இது திவ்வியப் பிரபந்தத்தில் பரமேச்சுர விண்ணகரம்’ என்று குறிப்பிடப் பெற்றுள்ளது. பரமேச்சுரன் (பரமபதநாதன். தேவாதி தேவன்) எழுந்தருளியிருக்கும் திவ்வியதேசமாதல் பற்றி இப்பெயரால் வழங்கி வருகின்றது இத்திவ்விய தேசம். இந்தத் திவ்விய தேசத்தைத் திருமங்கையாழ்வார் மட்டிலுமே ஒரு பதிகத்தால் (2.9) மங்களாசாசனம் செய்துள்ளார்.

20. வைகுண்டப்பெருமாள் கோயில் : இது உலகளந்த

இபருமாள் சந்நிதிக்குக் கீழ்த்திசையில் உள்ளது. இருப்பூர்தி நில்ையத்திலிருந்து இரண்டு ஃபர்லாங்_தொலைவிலுள்ளது. நகரப் பேருந்து நிலையத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் உள்ளது. எம்பெருமான் : பரமபதநாதன்; வீற்றிருக்கும் திருக்கோலம்; மேற்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார்' வைகுந்தவல்லி, இந்தப் பெருமான் பரத்துவ நிலைய்ைக் காட்டுபவ்ர்.

இத்திருக்கோயிலின் விமானம் முகுந்த விமானம், விமானத்தில் இரண்டு சந்நிதிகள்