பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சித் திருத்தலப் பயணம் 125

சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவைஊறுஒலி நாற்றமும் தோற்றமுமாய் நல்லரண் நாரணன் நான்முகனுக்கு

இடந்தான் தடஞ்சூழ்ந் தழகாயகச்சி பல்லவன் வில்லவன் என்றுலகில்

பலராய்ப் பலவேந்தர் வணங்குகழற் பல்லவன் மல்லையர் கோன்பனரிந்த

பரமேச்சுர விண்ணக ரமதுவே (2.9:1).

(வன்சொல்-வேதம்; பணிந்த-அடிமை செய்த; பல்லவன், வில்லவன் என்போர் அரசர்கள்; மல்லையர்கோன்-கடல் மல்லையைத் தலைநக ராகக் கொண்ட ஆண்டவன்;

என்பது முதற் பாசுரம். சாதாரணச் சொற்கள் கூட அச் சொற்கள் குறிக்கும் பொருள்களுள் அந்தரான்மாவாய் உறையும் எம்பெருமான் அளவும் சொல்லி நிற்கும் என்பது வேதாந்திகளின் கொள்கை. வேதங்கள் எம்பெருமானைப் பற்றி பேசுகின்றன. ஞானேந்திரியங்களால் அநுபவிக்கப் பெறுபவன் எம்பெருமான். முத்தொழில்களையும் மூன்றுருக் கொண்டு நிர்வகிப்பவன். இத்தகைய பெருமான் பல்லவ மன்னனின் கைங்கரியம் பெற்று பரமேச்சுர விண்ணகரத்தில் எழுந்தருளியுள்ளான். தன்னைப் போல்

உள்ளன. முதல் தளத்திலுள்ள (First Floor) சந்நிதியில் அரங்கநாதன் சீதேவி பூதேவித் தாயார்களுடன் சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இவரை வியூக நிலையைக் காட்டுபவராகக் கொள்ளலாம். இரண்டாவது தளத்தில் (Second Floor) உள்ள எம்பெருமான் பரவாசுதேவன் நின்ற திருக்கோலத்தில் காட்சி நல்குகின்றார். இவருக்குப் பூசை, புனஸ்காரம் இல்லை பெரி - திரு. 2.9 பதிகம்), மேலும் விவரம் வேண்டுவோர் தொ.கா.தி. என்ற நூலில் 5-வது கட்டுரை காண்க.