பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XᏙ

தந்திருக்கும் இந்நூலின் உள்ளே உள்ளம்

தந்தவர்க்குத் திருமாலின் அருளே வாய்க்கும்; சிந்தையிலே வைணவத்தின் செழுமை தேக்கிச்

சிறப்போர்க்கு மணிவண்ணன் மணமே வாய்க்கும்; முந்தை மர பறிந்தோரின் பாசு ரத்துள்

மூழ்குவார்க்கு முகில்வண்ணன் காட்சி வாய்க்கும்; சந்ததமும் தமிழ்ப்பாட்டின் இனிமைக் குள்ளே

சார்வோர்க்குப் பர்மணருள் வாய்க்கும்; வாய்க்கும்!28

சூழ்ந்தவினை வெல்லவேண்டி நாளும் பாடல்

சொல்வாரின் திருவுள்ளம் இளமை தானே!

தாழ்வகற்றும் பிரபந்தப் பண்ணில் தம்மைத்

தருவாரின் திருவுள்ளம் பசுமை தானே!

ஆழ்வார்கள் பாசுரங்கள் உயிரின் வேட்கை

அவைதோயும் திருவுள்ளம் இனிமை தானே!

வாழ்நாளில் தமிழ்ப்பாட்டில் தோய்ந்து தோய்ந்து

வளமறியும் திருவுள்ளம் இறைமை தானே! 29.

கணிகண்ணன் பின்சென்ற மாலைப் போலக்

கணிதமிழின் பின்செல்லும் நெஞ்ச மெல்லாம் துணிவுடைய இந்நூலின் பின்னே சென்றால்

தொடர்வதெலாம் நலமொன்றே உண்மை; உண்மை! மணிவண்ணன் புகழ்பாடி அருளும் பாடி

மானிடத்தின் வெற்றிதரும் பண்கள் பாடி அணியாக நூல்மாலை ஏற்றுக் கொண்டால்

அடைவதெலாம் அவனருனே: திண்ணம், திண்ணம்!

3G,

44-A, மகால் முதல் தெரு,

மதுரை-625 001 i4. (p. சாந்தமூர்த்தி 罗盘·夏置一五992