பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சித் திருத்தலப் பயணம் 131

அரவநீள் கொடியோன்

அவையுள்ஆ சனத்தை அஞ்சிடாதே இட அதற்கு பெரியமா மேனி

அண்டம் ஊ டுருவ பெருந்திசை அடங்கிட

நிமிர்ந்தோன் (9.1:8)

அரவம்-பாம்பு; அவை-சபை, அஞ்சிடாதேயப்படாமல் இட-அமைக்க: மேனி-உடம்பு; மிர்ந்தோன்-வளர்ந்த பெருமான்:

என்ற பகுதியாக இடம் பெறுகின்றது. அப்போது கொண்ட விசுவருபத் திருக்கோலத்தின் நினைவுச் சின்ன மாகப் பெரிய திருமேனியுடன் சேவை சாதிக்கும் இடம் பாடகம் ஆகும். இந்தத் திவ்விய தேசத்திற்கு வந்தபோது ஆழ்வார் இந்த எம்பெருமானை,

கல்ஆர் மதிள் சூழ் கச்சி நகருள்

நச்சி, பாடகத்துள்

எல்லா உலகும் வணங்க இருந்த

அம்மான் (6.10:4)

என்று அநுசந்திக்கின்றார் ஆழ்வார். இவர் திருநெடுந் தாண்டகத்தில்,

கல்உயர்ந்த நெடுமதிள் சூழ் கச்சி மேய

களிறு (15)

{மேய-எழுந்தருளியிருக்கும்)

என்று அநுசந்தித்த எம்பெருமான் திருப்பாடகத்து நாயனார் என்பவரே என்பது பெரியவாச்சான் பிள்ளை யின் திருவுள்ளம்.