பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநாட்டுத் திருத்தலப் பயணம் 137

முதல் முதலாகத் தோன்றிய இடம் திருக்கோவலூர். இதைக் கருத்தில் கொண்டு திருமங்கையாழ்வார் திருக் கோவலூர்’ என்னும் திருப்பதியை நோக்கி வருகின்றார்.

ஆழ்வார் திருக்கோவலூர் திருவிக்கிரமனை ஒரு திருமொழியால் (பதிகம் 2-10) மங்களா சாசனம் செய் கின்றார். பெரிய திருமொழியில் வேறு ஐந்து பாசுரங் களிலும் திருநெடுந்தாண்டகத்தில் மூன்று பாசுரங்களி லும் திருக்கோவலூர் குறிப்பிடப் பெறுகின்றது. கோவலூர் மன்னும் இடைக்கழி மாய்வனைப்" பாடிய

திருமொழியில்,

2. திருக்கோவலூர் : தென்னிந்திய இருப்பூர்திப் பாதையில் - விழுப்புரம் - காட்டுப்பாடி இருப் பூர்திக் கிளை வழியில் திருவண்ணாமலைக்குத் தென்திசையில் அமைந்துள்ள நிலையம். திருவண்ணாமலையிலிருந்து வருவோர் பேருந்து மூலமாகப் புறப்பட்டு நேராக ஊருக்குள்ளேயே வந்து இறங்கலாம். இருப்பூர்தி வழியாக வருட வர் நிலையத்தில் இறங்கி நிலையத்திற்கு அருகி லுள்ள அரகண்ட நல்லூரிலிருந்து 2 கல் தொலைவு நடந்து அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியில் சென்று தலத்தை அடைய லாம். எம்பெருமான்: திரிவிக்கிரமன்; ஆயனார்; நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார்: பூங்கோவல் நாச்சியார் . மேலும் விவரம் வேண்டுவோர் இந்த ஆசிரியரின் தொ. கா. தி. என்ற நூலில் 15-வது கட்டுரை காண்க. 3. பெரி. திரு. 2.4:1; 5.6:7; 6.10:5; 7.3:2; 7.10:4 4. திருநெடுந் 6, 7, 17. 5, பெரி. திருமடல்-60.