பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநாட்டுத் திருத்தலக் பயணம் 139

எழாநின்றதுமான பெண்ணையாற்றின் தென்கரையி இலுள்ளது திருக்கோவலூர். இங்குள்ள வைதிகர்கள் பலனைக் கருதாது சோமயாகங்களைப் புரிந்துகொண்டி ருப்பவர்கள். அப்படி அவர்கள் ஒரு பலனையும் கருதாது வேள்வி புரிந்தாலும், இவர்களது யாகமும் பகவானது நினைவினால் ஒருபலனைக் கொடுக்கவல்லதாகையாலே கண் காணும் பலன்கள் சம்பவிக்கும் செந்நெற் பயிர்கள் வயல்களில் செழிப்புற்று விளைக்கும்.

இவ்விடத்தில் ஒரு கருத்து நினைவு கூரத்தக்கது. அசித்தை எம் பெருமான் உடலாகக் கொண்டிருப்பதால், எங்கெங்கெல்லாம் அழகு கொழிக்கின்றதோ அங்கங் கெல்லாம் இறைவன் திருக்கோயில் கொண்டிருப்பான் என்று கருதித் தமிழர்கள் இறைவனுக்குக் கோயில் எடுத்து வழிபட்டனர். பெரும்பாலும் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து வழிபட்ட 108 திவ்வியதேச எம்பொருமான்களும் அழகுதவழும் இடங்களிலேயே திருக்கோயில் கொண்டு சீவான் மாக்கள் கடைத்தேறும் கருத்துடன் அவர்களிடம் கருணை வெள்ளமிட்டோடச் செய்கின்றனர். இத்தகைய அழகுமிக்க திருப்பதிகளில் ஒன்று ந டு நா ட் ைடட்ச் சார்ந்த திருக்கோவலூர். ஆண்டவனின் உடலாக இருக்கும் அசித்தின் அழகினை இப்பகுதியில் கண்டுகளிக்கலாம்.

திருக்கோவலூரின் நீர்வளம் நிலவளம் ஆழ்வாரின் பாசுரங்களில் நன்றாகச் சித்திரிக்கப் பெற்றுள்ளன. தோப்புகளும் துரவுகளும் சோலைகளும் சூழ்ந்த அழகான

2. சோமம்' - என்ற வடசொல் சோமு எனத்

திரிந்தது. சோமலதை என்ற வகைக் கொடியின் இரசத்தைப் பருகுதலை அங்கமாகவுடையது மூன்று ஆண்டுகளில் சாதிக்கத்தக்கதும் ஆனது சோமயாகம்.