பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீ பூரீமதே ராமாநுஜாய நம!

அணிந்துணரை

பேராசிரியர் டாக்டர் A. W. ரங்காச்சாரி எம்.ஏ., எம்.லிட் , பிஎச்.டி., பொருளாதாரத்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்-608 002.

தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசாகிய’ தேவாதி தேவனை தொழுவதைவிடப் பெரிய இன்பம் இல்லை என்று எடுத்து இயம்பும் வகையில் சொல்மாலை முடித்த ஆழ்வார்கள் பன்னிருவர். இவர்களுள் காலத் தாலும், அரிய எளிய உபதேச முகத்தாலும் நமக்கு அருகே உள்ளவர் திருமங்கை ஆழ்வாராவர். கலியன் அருளிச் செயல் இல்லை என்றால், திவ்விய தேசத்து எம்பெருமான் களின் வடிவழகை உள்ளபடியே உணர்ந்து வழிபட வழி யில்லை. 'விஷய ப்ரவனராகிய இவரைச் சாஸ்திரத்தைக் கொண்டு மீட்க வொண்ணாது; நம்மழகைக் காட்டியே மீட்க வேண்டும் என்று பார்த்து, தன்னழகை திவ்விய தேசம்தோறும் காட்டிக் கொடுத்தான் எம்பெருமான்' என்று பரம காருணிகரான பெரியவாச்சான் பிள்ளை அழகாகப் பணித்தபடி.

அர்ச்சா திருமேனியில் உள்ள ஊற்றத்தை இவ் வாழ் வார் பாசுரங்கள் உண்டாக்குவதுபோல மற்றைய்