பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* {{} பரகாலன் பைந்தமிழ்

பகுதியில் இவ்வூர் அமைந்துள்ளது. தென்னந்தோப்பு கள் கமுகத்தோட்டங்கள் மாஞ்சோலைகள் முதலிய வற்றை சம்மருங்கும் காணலாம்.

கோங்கரும்பு சுரபுன்னைக்

குரவு ஆர் சோலைக் குழாம்வரிவண்டு இசைபாடும்

பாடல் கேட்டுத் தீங்கரும்பு கண்வளரும்

கழனி சூழ்ந்த திருக்கோவலூர்(1)

{கோங்கு, சுரபுன்னை, குரவு - மரவிசேடங்கள்;

ణ్ణి కీ கணுக்கள் வளரும்; உறங்க அமாம்.!

என்பது பாசுரப்பகுதி. கோங்கு அரும்புகளும் சுரபுன்னை களும் குரவமலர்களும் நிறைந்த சோலைகளில் கூட்டம் கூட்டமாகவுள்ள வண்டுகள் பூக்களிலுள்ள மதுவினை யுண்டு அதனால் பெறும் களிப்பிற்குப் போக்கு வீடாக இன்னொலிகளை எழுப்புகின்றன. இந்த இசைப்பாடல் களின் இன்பச் சாறு பாயப்பெற்ற வயல்களிலுள்ள கரும்புகளின் கணுக்கள் வளர்கின்றன. வண்டுகள் பாடும் இசையைக்கேட்டு அஃறிணைப் பொருளாகிய கரும்பும் அசைவற்று நிற்பதாகக கூறும் பாதயம் எண்ணி எண்ணி அதுபவிக்கத்தக்கது.

இன்னொரு விதமாகவும் பொருள் கொண்டால், திருக்கோவலூர் எம் பெருமானையே கரும்பாகக் குறிப்

7. சர். ஜே. சி. போஸின் (தாவரங்களின் வளர்ச்சிக்கு இசை துணை செய்கின்றது) கொள்கை ஈண்டுச் சிந்திக்கத் தக்கது.