பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14; பரகாலன் பைந்தமிழ்

தியின் நறுமணம் மிக்க சோலைகளை க்களையும் ஊருக்கென்று வேலிபோல் தடாகங்களையும் ஆழ்வார் காட்டி

ஆகனார் : ஆழ்வார் கண்ணுக்கு ஆயனார் எவ்வாறு காட்சி தந்தார் என்பதைப் பாசுரங்கள் உணர்த்துகின்றன. பிரளயத்தில் ஆபத்து நேராதபடி உலகைத் திருவயிற்றில் வைத்துக் காத்தவன் (1). திருப் பாற்பகலில் திருவனந் தாழ்வான் மீது பள்ளி இரண்டுள்ள பெருமானே திருக்கோவலூரில் சேவை சாதிப்பவர் (2). முதலை வாயில் சிக்கிக்கொண்ட கசேந்திராழ்வானைக் காத்த பெருமான் என்பதையும் தம் விரோதிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே திருக், கோவலூரில் சந்நிதி பண்ணியிருப்பவன் (3). பெரிய திருவடியின்மீது எழுந்தருளி மாலி' என்னும் அரக்க னுடைய தலையை அறுத்தொழித்து சாதுக்களை வாழ்வித்தவன். இப்படிப்பட்ட வீரச் செயல்களையும் மற்றுமுள்ள செளலப்பிய செளசீல்ய குணங்களையும் நினைந்து நைந்து உள் கரைந்துருகிக் கண்ணிர் பெருக

10. மாலி, மாலியவான், சுமாலி என்னும் அரக்கர் வரும் சகோதரர்கள். இவர்கள் திருமாலுடன் 醬 வரலாறு உத்தர இராமாயணத்தில் {7-வது ச்ருக்தம்) விவரிக்கப் பெற்றுள்ளது. மாலிகருடன் மீது இவர்ந்து வந்த திருமாலுடன் போருடற்றும்போது சிறிது அடிபட்டுத் தேரை விட்டு இழிந்து கதையினால் கருடனை மோதினான்; இங்ங்னம் புடைபட்ட புள் அரசன் மிகத் துன்புற்று அவ்வேதனைக்கு ஆற்றாது திருமால்லப் போர்க்களத்தினின்றும் பின்புற மர்க எழுந்தருளிக் கொண்டுபோனான் : திரு. மால் பிராமுகமாகத் திரும்பியிருக்கையிலும் அவன் மீது தமது திருவாழியைச் செலுத்த அது மாலியினது முடியை அறுத்துத் தள்ளியது"