பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 48 பரகாலன் பைந்தமிழ்

திருச்சங்கு இரண்டு திருக்கைகளில் பொலியவும் பெரிய தொரு கற்பகத் தருவோ?’ என்னும்படி அடியவர்கட்கு கருணை பொழிபவனும், செந்தாமரை போன்ற திருவடி, திருக்கை, திருவாய் திருக்கண் ஆகிய அவயங் களின் ஒளியாலும் பீதக ஆடையின் காந்தியினாலும் செம்பொன்மயமான திருமேனியையுடைய பெருமானே திருக்கோவலூரில் கோயில் கொண்டிருப்பவன் (9).

άλ"σικνιε, 3δ α τι' * & 4 in இன்னும் இந்தப் பெருமான் எழுந்தருளியிருக்கும் 'திருக்கோவலுருக்குப் போவோம், வா’ என்று நெஞ்சை

விளிக்கின்றார் ஆழ்வார். 'கலப்பையை ஆயுதமாகக் கொண்ட நீண்ட கையையுடையவனும், நித்திய

சூரிகட்குத் தலைவனும், பெரிய திருவடிக்குத் தனிப் பாகனும் அரக்கர்கள் மீது எப்பொழுதும், சீற்றம் கொண்டிருப்பவனுமான எம்பெருமான் எழுந்தருளி விருக்கும் திருப்பதிகளிலெல்லாம் அவனுடைய திருவடி களைப் பாடிப் பூமி முழுவதும் பரவிவருகின்ற பெண்ணையாறு பாயும் படியான திருக்கோவலூரைச் சேவிப்போம் வா' என்று நெஞ்சை அழைக்கின்றார் (நெடுந் க்). மேலும், மிடுக்குடைய கார்த்த வீரியன் முதலான அரசர்கள் முடியும்படி கோடலிப் படையைத் தரித்துப் பரசுராமனாய் அவதரித்தவனும் தமது திருக் குணங்களால் அனைவரையும் ஈடுபடுத்தவல்ல இராமனாய் அவதரித்தவனும், பானாசுரப் போரில் சுப்பிரமணியன் முதலியோரைத் தோல்வியடையச் செய்த கண்ணனாய் அவதரித்தவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருப் பதும் துர்க்கையால்' காவல் செய்யப்பட்டிருப்பதுமான திருக்கோவலூரைச் சேவிப்போம், வ்ா மனமே!’ என்னும் நெஞ்சை அழைக்கின்றார் ஆழ்வார். (டிெ-6.)

11. இத்திருக்கோவிலைக் காவல் புரிகைக்காக விந்திய மலையைச் சார்ந்த அடவியில் இவள் தவம் புரிந்ததாகவும், திரிவிக்கிரமன் ஆணை