பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநாட்டுத் திருத்தலப் பயணம் 14శ్రీ

திரிவிக்கிரமனை ஆழ்வார் அர்ச்சையில் சேவித்த தாலும் (காஞ்சி, திருக்கோவலூர்) அப்பெருமானை விபவத்தில் மானசீகமாகச் சேவித்ததாலும் அந்தத் திருக்கோலத்தை தமது பாசுரங்களில் அமைத்துக் காட்டு கின்றார்.

ஒண்மிதியில் புனல்உருவி

ஒருகால் நிற்ப ஒருகாலும் காமருசீர்

அவுனன் உள்ளத்(து) எண்மதியும் கடந்(து)

அண்டமீது போகி இருவிசும்பின் ஊடுபோய்

எழுந்து, மேலைத் தண்மதியும் கதிரவனும்

தவிர ஒடித் தாரகையின் புறந்தடவி

அப்பால் மிக்கு மண்முழுதும் அகப்படுத்து

நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே. (5)

யால் அவள் காவல் புரியும் பணியை ஏற்றதாக வும் புராண வரலாறு கூறும். துர்க்கை காவல் புரிவதைத் திருமங்கையாழ்வாரே தமது பாசுரங் களில் (பெரி திரு. 2. 10: 6; திருநெடுந் ?) குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் துர்க்கை யின் சிலையைத் திருமால் ஆலயங்களில் காண்பது இல்லை. எனினும், அதனை ஈண்டுக் காண்கின்றோம். இத்திருக்கோயிலின் முதல் திருச்சுற்றின் முகப்பிலேயே, சந்நிதிச் சுற்றுக் குள் நுழைந்ததும் இடப்புறத்தில் இத்தேவி சேவை சாதிக்கின்றாள்.