பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii

ஆழ்வார்களின் பாசுரங்கள் உண்டாக்க மாட்டுவன அல்ல என்று சொல்ல இயலாத முறையில் அர்ச்சாது பவம் மிகுந்திருக்கும் இவரிடத்தில். அவ்வநுபவத்தின் பெருமைக்குச் சேர, அழகிய சப்த ஜாலங்களும், வாத்திய அமைப்புகளும், பாடும் நாவுக்கும், கேட்கும் காதுக்கும், பேரின்பம் பயப்பனவாகும். பாடப்பெறும் பெருமாளும், அநுஸந்திக்கும் பெரியோர்களும், தம் நிலைமையை மறந்து இருக்கும் நிலையில் பாசுரங்களைப் பொழியும் அழகு இவர் ஒருவரதே. தம் பாடலில் எவ்வளவு ரஸத் தைக் கண்டால் வெண் சங்கம் ஒன்று ஏந்திய கண்ண! நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே?' என்று பெருமாளையும் கூப்பிட்டு பாடல் இன்பத்தை அநுபவிக்க வாரீர்!’ என்று அழைக்க இயலும். ஆசு, விஸ்தாரம், மதுரம், சித்ரம் என்ற நான்கு வகைக் கவிதைகளைப் ப ா டு வ த ன் மூலம், நாலுகவிப் பெருமாளாகத் திகழ்ந்த இவ்வாழ்வார் தமிழ்க் காவியத் தின் கரைகண்டவரே. கலிகன்றி ஒலி செய்த இன்பப் பாடலாம் பெரிய திருமொழியின் ரஸத்தை உண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலிமிக்க சீயம் இராமாது சன்' என்பர் அழுதனார். நூல் துறை முற்றும் ஓதிய பூரீ பராசர பட்டர் தம்மைத் 'திருநெடுந் தாண்டகம் கற்றோம்' என்று பெருமை கொள்வர். கவிதார்த்திக இங்கமாகிய பூரீ வேதாந்தாசாரியரும் 'கலியன் உரை கொண்ட கருத்துடையோர்” ஆவர். எம்பெருமானுடைய அர்ச்சாவதாரத்தில் உள்ள ஊற்றத்தாலே இவர் தம்மை தேஹாத்ம வாதியாகக் கூறிக்கொள்வர்” என்றும், * ஆத்மாவை வெய்யிலிலே இட்டு, சரீரத்தை நிழலிலே வைத்தவர்' என்றும் பெரியோர் இவர் பெருமையைப் பேசுவர்.

ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த திவ்ய தேசங் கள் 108-இல் 86 திவ்ய தேசங்களை நேரில் சென்று பாடிய பெருமை இவ்வாழ்வாருக்கே உரியது. இறைவன் வீற்றி