பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: { பரகாலன் பைந்தமிழ்

ஒஇ.ஒரடி இட்டு; புனல் ஆவான நீர் ...?: னன்-மாவலி; எண்ம்தி-நினைத்திருக்கும் எண்ணம்; விசும்பு-ஆகாயம் மதி:சந்திரன்; தாரகை-நட்சத்திரம்: மலர்புரையும்-தாமரை பலரையொத்த!

என்பது திருநெடுந் தாண்டகப் பாசுரம்.

இந்தப் பாசுரத்தில் வியந்தவர் வெருக்கொள விசும்பின் ஓங்கிய உலகளந்த திரிவிக்கிரமனை மானசீக மாகக் காண்கின்றோம். காஞ்சியில் உலகளந்த பெருமாள் சந்நிதியில் சுவரின்மீது செதுக்கியுள்ள சிற்பம் இந்தப் பெருமான் தனியே நிற்கும் வடிவமாகும். திருக்கோவ லூரில் மூ ல வ ரின் திருவுரு மரத்தாலானது, எம்பெருமானின் ஒரு திருவடி மாவலியின் தலைமீது வைத்த நிலையில் உள்ளது. மற்றொரு திருவடியோ விண்ணை அளப்பதாகத் தூக்கிய நிலையில் காணப் பெறுகின்றது. பெரிய பிராட்டியார், மாவலி சுக்கிராச்சாரியார், மிருகண்டு முனிவர், அவர் துணைவி, முதலாழ்வார்கள் மூவர் முதலானோர் சூழநிற்க வல்த் திருவடியை நான்முகனும், இடத்திருவடியை மாவலியின் புதல்வன் முசியும் ஆராதித்து நிற்கின்றனர். மாவலியை வெற்றிகொண்ட எக்களிப்பால் இடக்கையில் இருக்க வேண்டிய சங்கினை வலக்கையில் ஏந்திய நிலையில் காணப்பெறுகின்றார் எம்பெருமான்,

திருக்கோவலூர் சேவை முடிந்ததும் திருவயிந்திரப் புரம் சேவிக்கத் திருவுள்ளங் கொண்டு அந்தத் திருப்பதியை நோக்கி வருகின்றார் ஆழ்வார்.

திரு.அயிந்திரபுரம் : எழில் கொழிக்கும் இயற்கைச் சூழ்நிலையிலமைந்த இத்திருத்தலத்தைத் திருமங்கை

12. திரு.அவிந்திரபுரம் : தென்னிந்திய இருப்பூர்திப் பாதையில் கடலூர் நிலையத்திலிருந்து சுமார் மூன்றுகல் தொலைவிலுள்ளது. கடலூரிலிருந்து