பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலன் பைந்தமிழ்

3.

அளிகுலம் - வண்டுக் கூட்டங்கள்: பொதுளி. இநருங்கி, செருந்தி-சுரபுன்னை; அணைந்து - சேர்த்து, உழிதரு-சஞ்சரிக்கப்பெற்றi

என்பது முதல் பாசுரம். முதல் இரண்டடிகளில் திவ்விய தேசத்து எம்பெருமானின் சிறப்பும், பின் இரண்டு அடிகளில் இவ்விய தேசத்தின் சிறப்பும் கூறப்பெறு கின்றன. பாசுரந்தோறும் இங்ங்ணமே அமைந்துள்ளது. திவ்விமாகிய திருமேனியில் (அசித்து) எம்பெருமா னாகிய பரமான்மா அமைந் து வைணவ தத்துவமாகிய சரீ சகிரிபாவனையை விளக்கும் பாங்கில் அமைந்திருப்பது போல் தோன்றுகின்றது.

பாசுரத்தில் ஆழங்கால் பாடுவோம். கோலவராகமாகி 'ப்பிராட்டியை மீட்டுக் கொணர்ந்தவனும் பாலாழி வில் திருக்கண் வளர்ந்தருள்பவனுமான எம்பெருமான் கோயில் கொண்டருளிய இடம் திருவயிந்திரபுரம். அவளோ "உளங்கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத் துன் னறிய தேனாக (4.3:9) இனிப்பவன். அவன் உறை யும் இடம் சோலைகள் சூழ்ந்தது. அச் சோலைகளில் திரன் திரனாக வண்டுகள் புகுந்து மதுவைப் பருகிக் கணித்து அக்களிப்பிற்குப் போக்குவீடாக இன்னிசைகளைப் பாடிக்கொண்டு உலாவுகின்றன. அங்ங்னம் உலாவுங்கால் செறியப் பூத்த சுரபுன்னை மரங்கள் எதிர்ப்படுகின்றன. அவற்றிலும் மதுவைப் பருகச் செல்லுகின்றன. அவ் வண்டின் குழங்கள். இப்பாசுரத்தில் விபவ அவதார எம்பெருமானும் (வராக மூர்த்தி) வியூக எம்பெருமானும் (பாற்கடல் துயிலும் பரமன்) ஆழ்வார் திருவுள்ளத்தில் சேவை சாதிக்கின்றனர். நாமும் அவர்களைச் சேவித்து மகிழ்கின்றோம்.

இப்பாசுரத்தில் வரும் வண்டு என்பதன் உள்ளுறைப் பொருளில் நம் மனம் ஈடுபடுகின்றது. வண்டுகட்கு