பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநாட்டுத் திருத்தலப் பயணம்

f

5

3

'மது விரதம்' என்ற ஒரு திருப்பெயர் உண்டு. தேனைத் தவிர வேறொன்றையும் உணவாகக் கொள்ளாதது என்பது இதன் பொருள். அது போன்ற தன்மையர் அடியார்கள் (பாகவதர்கள்) ஆதலின் உளங்கனிந்திருக்கும் அடியவர்” என்று சிறப்பிக்கப் பெறுகின்றனர். வண்டு கட்கு மேல்நோக்கிய வழிக்குச் செல்லக் கருவியாகப் பயன்படும் இரண்டு சிறகுகள் போன்று அடியவர்கட்கு அவர்களின் ஞான அதுட்டானங்கள் பயன்படுகின்றன. இதனால் வண்டுகளைப் பாகவதர்களாகச் சொல்லுவது மரபு", அத்தகைய பாகவதர்கள் பகவத் பாகவத போக்கி யதைகளை அநுபவித்த ஆனந்தத்திற்குப் போக்கு வீடாக நாதமுனிவர், தம்பிரான்மார்(அரையர்) முதலானோரைப் போல பண்கொள் தலை கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்தும் உழல்வர் (3.5:2) ; இந்த நிலையை "இன்னிசை முரன்று எழும் என்ற சொற்றொடர் குறிப் பிடுகின்றது. பகவத் பாகவத குணாதுபவத்திற்கு வாய்த்த இடங்கள் பொழில் எனப்படும். செருக்தி' என்ற சுர புன்னை மரத்தைக் குறித்ததன் தாற்பரியம் என்னவென்றால்: "தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனை - தனதாள் நிழலே' (6.3:9) என்று ஆழ்வார் குறிப்பிட்ட வாறு சம்சாரமாகிய கொடிய வெயிலிலே தபிக்கப் பெற்றவர்கட்கு நிழல் தந்துவிடாய் தீர்க்கும் நன்மர மாகிய எம்பெருமானின் கழலிணைகளில் சேர்ந்திருக்கும் இருப்பே செருந்தி என்று குறிக்கப் பெற்றுள்ளது. எனவே, சாரத்தை அறிந்தவர்களாகிய (லாரக்ராஹிகள்) பாகவதர்கள் கூட்டம் கூட்டமாகத்திரண்டு பகவத் பாகவத குணாதுபவக் களிப்பாலே எம்பெருமானைப் பற்றிய இசைப் பாடல்களை-ஆழ்வார்களின் பண் ணார்ந்த பாடல்களைப்-பாடிக்கொண்டு எம்பெரு

13. ஆசா. ஹரு. சூத்திரம், 152. (புருடோத்தம

நாயுடு அவர்களின் பதிப்பு).