பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

湾器壶 பரகாலன் பைந்தமிழ்

மானின் திருவடிப் பேற்றினையே நினைந்து கொண்டு வாழும் இடம் திருவயிரபுரம் ஆகும்.

திருத்தலச் சூழ்நிலை : எம்பெருமான் கோயில் கொண்டுள்ள எழிலார்ந்த திருவயிந்தரபுரச் சூழ்நிலை கவைப் பாசுரங்கள் பல கோணங்களில் காட்டி தித்தின் தன.

"பின்னும் மாதவிப் பந்தலில் பெடைவரப்

பிணியவிழ் கமலத்து

தென்ன” என்றுவண் டின்னிசை முரல்தரு

திருவயிந்திர புரமே

கழாதுவி-தருக்கத்தி: பெடைபெண் அன்னம்; பிணி-கட்டு, கமலம்-தாமரை, முரல்தரு-பாடா திற்கின்ற;

என்.துே ஒரு கோணத்தில் பார்க்கப்பெறும் சூழ்நிலை. ஆண் கண்டுகள் தம்முடைய பெண்வண்டுகளுடன் கூடித் தாமரை இரின் மீது இருந்துகொண்டு மதுபானம்’ பண்ணுகின்றன. தம்பதிகட்குள் ஊடல் (பிரணய கலகம்) ஏற்படுகின்றது. பெண்வண்டு ஆண்வண்டைவிட்டு நீங்கிக் குருக்கத்திப் பத்தலில் புகுந்து ஒளிந்துகொள்ளுகின்றது. அதனைப் பிரிந்து ஆற்றமாட்டாத ஆண்வண்டு, தனது துணைகொண்டு ஊடல் தீர்ந்து ஓடிவருமாறு தாங்கொணாத தனது சிரம நிலையை வெளியிடுகின்ற இன்னிசைப் பாடல்களைத் தாமரை மலரில் இருந்து கொண்டு பாடுகின்றது. இப்படிப்பட்ட பொழில் வாய்ப்புப் பொருந்தியது இத்திவ்வியதேசம். வண்டானது கிளைகளின் (சாகைகளின்) நுனியிலே திரியுமாப்போல வேதசாகையின் நுனியில் (உபநிடதங்களில்) விளங்கு கின்ற எம்பெருமான் எம்பிராட்டியுடன் ஊடல் கொண்டு செய்யும் செயல்களைச் சொல்லியதாகக் கொள்வர்