பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநாட்டுத் திருத்தலப் பயணம் 155

வியாக்கியாதாக்கள். பிராட்டியும் தானுமான சேர்த்தி யில் ப்ரணயகலகம் மாறாதே சொல்லுமாப்போலே யாயிற்று அகங்குத்தை திர்யக்குகளையுடைய யாத்திரை யும்' என்ற இன்சுவை மிக்க பெரிய வாச்சான்பிள்ளை அருளில் செயலில் ஆழங்கால்பட்டு நிற்கின்றோம். இன்னொரு பக்கத்தில் அன்பொடு பொருந்தி வாழும் அன்னப்பறவைகளின் தம்பதிகள் காட்டப்பெறுகின்றன. இவை பெரிய தாமரைப் பூவாகிய படுக்கையில் பொருந்தி வாழ்கின்றன. இவற்றின் வாழ்வு மேலும் இனிதாகும் பொருட்டு செந்நெல் நிறைந்த கதிர்கள் சாமரம் வீசு கின்றன. (7)

பிறிதொருகோணத்தில் பாசுரம் காட்டும் சூழ்நிலை இது. நெருங்கிய குருக்கத்திச் செடிகளோடும் செண்பக மரங்களோடும் தழுவி நிற்கின்றன. முல்லைக்கொடிகள். செந்தாமரைப் பூக்கள் அங்குள்ள வயல்களில் செழித்து

வளர்ந்து காணப்பெறுகின்றன. (3) வயல்களின் இன்னொரு பக்கத்தில் மெல்லிய கரும்பின் இளந்தடிகள் ஓங்கி வளர்ந்து காணப்பெறுகின்றன. வயல்களின்

பிறிதொரு புறம் கருப்பஞ்சாற்றின் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேறு காணப் பெறுகின்றது (4)

மற்றொரு கோணத்தில் காணும் சூழ்நிலை இது : வானத்தில் சஞ்சரிக்கும் சந்திரன் தவழப்பெறும் ஓங்கி உயர்ந்த பெரிய மலையும் பெரிய மதிளும் சூழ்ந்திருக்கப் பெற்றது இத்திருத்தலம். இந்த மலையில் வண்டுகள் இசைபாடும் சோலைகள் நிரம்ப உள்ளன (6).சோலையில் குரங்குகள் புரியும் சிறுகுறும்புகள் கூறப்பெறுகின்றன,

14. அங்குத்தை-அவ்விடம்; திர்யக்குகள்-விலங்கு

கள்.