பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பரகாலன் பைந்தமி ழ்

என்ற இறுதிப் பரசுரப் பகுதி தெளிவாக்குகின்றது. மும் மூர்த்திகளாக நின்று படைப்பு, அளிப்பு, அழிப்புச் செயல் களைச் செய்பவனும் (பரநிலை) மூவுலகுண்டு உமிழ்ந்த வலும் {வியூக நிலை), இவ்வுலகினை அளந்தவனும் {ன்பவ நிலை). திரு அயீந்திர புரத்தில் உறையும் சோதி யும் அர்ச்சைநிலை) ஒருவனே என்பது ஆழ்வார் கருத்

தாகும்.

வெற்றி,வீரச் செயல்கள் : மேற்கூறப் பெற்ற உண்மையின் அடிப்படையில் பாசுரங்கள் தோறும் குறிப்பிடப்பெறும் எம்பெருமானின் வீரச்செயல்களும் வெற்றிச் செயல்களும் நம் மனத்திடல் குமிழியிடுகின்றன. இந்த எம்பெருமான் கோலவராகமாகிப் பூமியை மீட்டுக் கொணர்ந்தவன்; திருப்பாற்கடலில் யோகத்துயில் கொண்டிருப்பவன் (1). சுடர்விட்டு ஒளிரும் திருவாழியை ஏத்தியவன்; செய்யவள் உறையும் திருமார்பன்; வேதங் கன் ஒதும் பல்லேறு பொருள்களும் தானேயாக இருப்ப இது 2). பாலனாகி எழுலகையும் உண்டு சிறிய ஆலந்தளிரில் அறிதுயில் கொள்ளும் மாயவன் (3). இரணி பனின் கார்பை இரண்டு பிளவாக்கிப் பள்ளியில் ஒதிய அவன் மகன் சிறுக்கன் உய்யக் கருணை வெள்ளம் பாய்ச்சியவன் (A). மாவலியின் வள்ளண்மையைப் பயன் படுத்திக் கொண்டு அவனிடம் மூவடிமண் இரந்து பெற்று எல்லா உலகங்களையும் தன் திருவடியால் அளந்து தன்னுடையனவாக்கிக் கொண்டவன் (5), கூனியின் கொடிய சொற்கேட்டுப் பிராட்டியோடு கானகத்திற்கு எழுத்தருளிய காளமேகம் (6). பிராட்டியின் காரண மாகவே இலங்கைபர்கோன் முடிகள் பத்தையும் அயன் சரத்தால் உருண்டோடச் செய்த வீரராகவன் (7). அப் பிராட்டியினை அடைவதற்காகவே வில்லிறுத்த வித்தகன். பசிக்கோபத்தால் இந்திரன் பெய்வித்த கல்மாரியைக் குன்றம் ஏந்தித் தடுத்து ஆயர்களையும் ஆநிரைகளையும்