பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 16 i

தெய்வப் புனல்சூழ்ந்து, அழகாயதில்லைத் திருச்சித்திர கூடம் (7) என்றும், சேடுயர் பூம்பொழில்தில்லைத் திருச் சித்திர கூடம் (3.3:2) என்றும் வருணிக்கின்றார். ஊரைச் சூழ்ந்த சோலைகளில் மயில் கூட்டங்கள் ஆடுகின்றன. அவை சோலைகளே ஆடுவனபோல் காட்சியளிக்கின்றன. தீர்த்தங்கள் மதுவோடு கூடிப் பெருகுவதால், மதுவின் நசையால் வண்டுகள் திரளாக மொய்க்கின்றன. (3.2 : 1). அருகில் வெள்ளாறு (கிவா என்று குறிப்பிடுவார் ஆழ்வார்) தில்லையை வலங்கொண்டு வருகின்றது. இந்த ஆறு யானைக் கொம்புகளையும், சந்தன மரங்களை யும் தள்ளிக்கொண்டு பெருக்கெடுத்து வருங்கால் முத்து களைக் கொழித்துக் கொண்டு வந்து கழனிகளில் தள்ளும்; அந்த முத்துகள் விதைவிதைத்துபோல் காட்சி அளிக்கும். அவற்றைக் கயல்கள் கண்டு இவை என்னவோ?’ என்று வெருவித் திரியும் (3.2 :7)

நான் மறையாளர்கள் நாடோறும் தீவளர்த்து வைதிக கருமங்களைத் தவறாது செய்யும் ஊர். வாய்ஒது வேதம் மலிகின்ற தொல்சீர்

மறையாளர் நாளும் முறையால் வளர்த்த தீஓங்க ஒங்கப் புகழ் ஓங்கு தில்லை (3. 2 : 2)

அவனது திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருந்த தொருமலை. அதனைப் போலவே, இத்தலமும் எம்பெருமானுடைய திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருந்ததுபற்றி அத்திருந்ாமம்ே இதற்கும் இடப் பெற்றது. போலும் எம்பெருமான்: கோவிந்தராசன், சித்திர கூடத்துள்ளான்; கிழக்கு நோக்கியா திருமுக மண்டலம்; சயனத்திருக் கோலம். தாயார் : புண்டரீகவல்லி. நடராசர் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. பெரி. திரு. 32; 3.3 பெரி. திரு. மடல் (24). மேலும் விவரம் அறிய விழைவேள்ர் சோ. கா. தி. (2) என்ற நூலில் 1-வது கட்டுரை காண்க. ப. க.--11