பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 星密、

(ஊன் - மாமிசம்; காவல்இட்டு - போகாதபடி யாக; மஞ்ஞை - மயில்; கனம் - கூட்டம்; மாடுபக்கம்; தேன் - வண்டு, கயல் - மீன்; கால் - வாய்க்கால், பழனம் - வயல்)

என்பது முதற்பாசுரம். வீடுபேற்றை அவாவும் முமுட்சு கள் ஊண் உண்ணாது நீரையும் காற்றையுமே உட் கொண்டு உயிரைக்காத்துப் புலன்களை ஒடுக்கித் தவம் புரிகின்றனர். சிலர் இளங்காய்களையும் நெடுநாள் உலர்ந்த பழங்களையும் உட்கொண்டு ஐந்து தீயூடு நின்று தவம் புரிகின்றனர். இவர்கள் நிலையைக் கண்டு கழி விரக்கம் கொண்ட ஆழ்வார் "தில்லைத் திருச்சித்ரகடம் சென்று சேர்மின்கேள்’ என்று ஒரு தடவைக்கு ஒன்பது தரமாக ஆற்றுப் படுத்துகின்றார். இத்திருத்தலம் சென்று சேர்ந்தால் பரமபுருஷார்த்தம் எளிதாகக் கிடைக்கவேண்டி யிருக்க, அரிய வழிகளை மேற்கொள்வது ஏன்? என்று கேட்கின்றார். இப்பாசுரத்தில் நீக்க வேண்டியவற்றைப் பின்னடிகளிலும் பேசுகின்றார் ஆழ்வார்.

ஆழ்வார் இத்தலத்து எம்பெருமானை மங்களா சாசனம் செய்யும் பொழுது பலவிபவாவதாரப் பெருமான் களை அதுசந்திக்கின்றார். அவர்களுடைய வீரச்செயல் களிலும் விசித்திரச் செயல்களிலும் ஆழங்கால் படு கின்றார். ஒருகாலத்தில் இந்த வையம் பரந்த கடல் வெள்ளத்தில் மூழ்கிப்போக, அப்பொழுது மிக்க இனங் கொண்டவராகத் திருவுருவாகி அதைத் தம் கோட்டால் துரக்கிக் கொணர்ந்தவன் (3.2 : 3); அழகிய வாமன. உருவங்கொண்டு மாவலியின் வேள்வி நிலத்திற்குச் சென்று மூவடிமண் இரந்து பெற்றவன் (4); இருபத் தொரு தலைமுறை rத்திரியர்களைக் கொன்றொழித்த பெருமான் (5); வருணன் உதாசீனத்தால் அணைகட்ட வாராத்து கண்டு அவன் மீது சினங்கொண்டு அனை வரும் நடந்தே செல்லும் படி கடலை வற்றச்செய்வேன்' என்று கூறிப் பொங்கி எழுந்து வருணனைச் சரண்