பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 369

பறியாமல் கழனியை விட்டு வெளியேறுகின்றனர் (3, 5). கடலில் உள்ள சங்குகள் அவ்விடத்தை இகழ்ந்துவிட்டு நீங்கிச் சீகாழியில் வந்து சேர்கின்றன; தாழைகள் நிறைந்த கழனிகளில் திரிகின்றன; பின்னர் கழனிகளை யும் துறந்து கழனிகட்கு வருகின்றன; பின்னர் மழைநீர் வெள்ளமாகப் பெருகி வருகின்ற வாய்க்கால்களின் மூலம் ஊரிலுள்ள வீதிகளில் வந்து சேர்ந்து சங்குகளையும் முத்து களையும் ஈனுகின்றன (7). அணில்கள் கிளைகிளையாகத் தாவித் தவழ்வதனால் பாக்குமரங்களின் பழுத்த காய்கள் உதிர்ந்து விழுகின்றன; அவை பலா மரங்களின் காய்களின் கனத்தால் தாழ்ந்த கிளைகளில் நெருங்கியிருக்கும் பருத்த, கனியப் பழுத்த, பலாப்பழங்களின் மது விழுவதால் அவை நசுங்கித் தேனைப் பொழிகின்றன (8). வண்டுகள் தம்முடைய டேடையோடும் சேர்ந்திருந்து நீர்நிலைகளி லுள்ள தாமரைப் பூவில் புகுந்து தேனைப் பருகி, அங்கே உறங்கி, பூந்தாதுத் துகள்களில் புரண்டு களித்து இசை பாடுகின்றன (9). இங்ஙனம் ஆழ்வார் சீகாழியின் மருத நில வளத்தைக் காட்டுகின்றார்.

நகராட்சி : ஆழ்வார் பாசுரங்களிலிருந்து நகரைப் பற்றியும் ஓரளவு அறியமுடிகின்றது. நகரிலுள்ள பெரிய மாடங்களில் பதிக்கப்பெற்ற நீல மணிகள் அந்திப் பொழுதை ஆதாரமாகவுடைய இருளை அதிகப்படுத்து கின்றன; அவற்றின் நடுவே அழுந்தியுள்ள முத்துகள் குளிர்ந்த திங்களின் நிலவெள்ளியைக் காட்டுகின்றன; இவற்றின் இடைஇடையே அழுத்தப்பெற்றுள்ள பவளங் கள் எழுஞாயிற்றின் சிறந்த ஒளியைப் பரப்புகின்றன (4). நகரிலுள்ள மாளிகைகள் மலைபோன்று உயர்ந்துள்ளன. அந்த மாளிகையின் மீதுள்ள தளத்தில் நின்று உடுக்கை இடைமாதர்கள் நட்புடன் உரையாடி மகிழ்கின்றனர். அவர்களின் தாமரை போன்ற முகத்தின் ஒளியைக் கண்ட திங்கள் வெள்.கி வருந்துகின்றான். நான்கு மறைகள்,