பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix

'அரசர் பெருமானே! தினமும் 1008 திருமால் அடியார்க்கு அமுது செய்வித்து, அவர்கள் ரீபாத தீர்த்தமும், பே னகம் செய்த சேடமும் உண்டு, ஒராண்டுக் காலம் வைணவ நெறியுடன் ஒழுக வேண்டும் என்று அறிவிக்க, அதனையும் அவர் உறுதியுடன் நிறைவேற்றியதை உகந்த அரங்க நகரப்பன், அவரை உய்விக்க, பிராட்டியாரோடு நேரே எழுத் தருளியபோது, பெருமாளை வெருட்டி, திருமந்திரம் உபதேசிக்கப் பெற்ற வரலாற்றைச் சுவை படக் கூறியுள்ளார் பேராசிரியர் ரெட்டியார்.

இரண்டாவது இயலில், ஆழ்வார் வயலாலி மணவாள னிடமிருந்து உபதேசம் பெற்ற திருமந்திரத்தின் வைபவத் தையும், இதனை எம்பெருமான் வதரியில் தானே சிஷ்ய னுமாய் ஆசார்யனுமாய் நின்று உபதேசித்தது, பின் அதனை ஆழ்வார்க்கு உபதேசித்த வரலாறு, இம் மந்திரத் தின சீர்மையை ஆழ்வார் உணர்ந்து, தமது முதல் பதிகத்தில் நன்று நானுய்ய நான் கண்டு கொண்டேன்' *செல்கதிக்கு உய்யுமாறெண்ணி நல்துணையாகப் பற்றி னேன்’’, நலந்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்’ என்று வெளியிட்டு, நற்பொருள் காண்மின், நாடிநீர் உய்மின், நாராயணா என்னும் நாமம்' என்று கூறி, திரு நறையூர் பாசுரத்தில் 'நானும் சொன்னேன். நமரும் உரை மின் நமோ நாராயணமே', நங்கள் வினைகள் தவிர உரைமின் நமோ நாராயண மே” என்றும், திருவேங்கடப் பதிகத்தில் பே சு மி ன் திருநாமம் எட் டெழுத்தும்’ என்று எட்டெழுத்தாகிய திருமந்திரம் ஸ்ர்வாதிகாரம் என்று விளக்கி, திருக்கண்ணபுரத் தெம் பெருமானிடம் தாம் கற்ற திருமந்திரப் பொருள் சிறப்பு பாகவத சேஷத்வமே' என்பதை,

மற்றும்ஒர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு உற்றிலேன்-உற்றதும் உன்னடியார்க் கடிமை மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும் கற்று நான் கண்ண புரத்துறை அம்மானே என்று கோடிட்டுக் காட்டியுனளார்கள் (பக்கம் 26).