பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 17.3

தலச்சூழ்நிலை : இந்தச் சூழ்நிலையை ஆழ்வார் பல பாசுரங்களில் பேசுகின்றார். இந்த ஊரை அடைவ தற்கு முன்பே திருத்தலச் சூழ்நிலை ஆழ்வார் கண் வட்டத்தில் விழுகின்றது. புல்லிவண் உறையும் பொழில் புடை சூழ் தென் ஆலி' (3.5:10 ) என்று சோலை வள்த்தைப் பேசுகின்றார். அசோக மரத்தின் இளத் தளிர்கள் எல்லாவிடங்களிலும் பரவி இருப்பதனால் எங்கும் செந்தழல் பரவி இருப்பது போன்ற காட்சி காட்சி தருகின்றன (!). புன்னை மரங்களும் சுரபுன்னை மரங்களும் பொருத்தி யிருக்கின்றன. சோலைகளில்; அங்குள்ள விசாலமான தடங்களில் அன்னங்கள் தங்கி வாழ்கின்றன (4). புன்னை, ஞாழல் மரங்களின் நிழலில் குளிர்ந்த தாமரைப் பூவின்மீது ஆண் நண்டுகள் தங்கி யிருக்கின்றன (7). இளவண்டுகள் செண்பகப் பூவையும் மல்லிகைப் பூவையும் தழுவி அவற்றை விட்டு நீங்கித் தென்னை மரங்களின் பாளைகளில் உள்ள தாதினை அளைகின்றன (8). கருப்பஞ்சாறு அட்டபுகை காள மேகம்போல் எங்கும் பரவி மணம் வீசுகின்றது; சோலையிலுள்ள மயில்கள் அப்புகைத் திரளை மேகத் திரளாக மயங்கிக் களித்துக் கூத்தாடுகின்றன (2). அலையெறிகின்ற நீர்வளம் பொருந்திய வயல்களில் செந்நெற்பயிர்களை அறுப்பவர்களின் முகத்தில் மீன்கள் குதித்துப் பாய்ந்து கருப்பஞ்சோலைகளில் சென்று சேர்கின்றன (3). துதிப் பாடல்களின் மதுரமான ஓசை யும் சங்குகளின் முழக்கமும், பல்வேறு வகைப்பட்ட இசைக்கருவிகளின் ஒலியும், மாதர்களின் நடன ஒலியும் நீங்காதிருக்கப் பெற்றிருப்பது திருவாலி (5). சந்தியா வந்தனம் முதலிய நித்திய கருமங்கள், யாகம் முதலிய நைமித்திக கருமங்கள், காமிய கருமங்கள் இவற்றைத் தெரிவிக்கும் வேதங்களைத் தொன்று தொட்டு ஒதியும் ஒதுவித்தும் வரும் அந்தணர்கள் நிறைந்திருக்கும் இத்திருத்தலத்தைக் (6) காண்கின்றார் ஆழ்வார்.