பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷罗荡 பரகாலன் பைந்தமிழ்

பெற்றதால் இத்திருத்தலம் இந்தளூர் என்ற இருநாமம் பெற்றது. இதற்கு வடமொழியில் சுகந்தவனம்’ p திருத்பெயரும் வழங்கி வருகின்றது. ஒரு திருமொழியால் (4.9) இப்பெருமானை மங்களாசாசனம் செய்கின்றார். இத்திருமொழியின் பாசுரங்களின் அநுபவம் பேரின்பம் பயப்பதாக உள்ளது. இந்தப் பாசுரங்களை நாவினாற் சொன்னாலும் பிறர் சொல்லக் கேட்டாலும் நெஞ்சு நீர்ப் பண்டமாய் உருகும். திருவிந்தளுர் எந்தையைக் கண்ணாரக் காண வேண்டும் என்றும், கையாரத் தொழ வேண்டும் என்றும், ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்: என்றும் எவ்வளவோ பாரித்துக்கொண்டு வந்தார் ஆழ்வார். ஆனால் அப்பெருமான் திருக்கண்களால் குளிர தோக்குதல், வாரியணைத்தல், வினவுதல், அத்தாணிச் சேஆகத்தில் ஏவுதல் ஆகியவற்றில் ஒன்றும் செய்திலன்! திசங்குச (தடையில்லாத) சுவாதந்திரனான அவனது திருவுள்னத்தை பார்தான் அறியவல்லார்? கல்நெஞ்ச திதையும் உருக்கவல்ல ஆழிவாருடைய பாசுரங் களைச் செவிமடுக்க வேண்டும் என்று பிச்சேறினான் போலும். கோபுரவாயிலின் கதவையும் அடை த்துக் கொண்டு கிடந்தான் போலும். பாசுரங்களை மிடற்றொலி கொண்டு ஒதினால், ஒதி உளம்கரைந்தால், ஆழ்வார் துடிக்கின்ற துடிப்பை அறியலாம்.

பிரேமத்தால் பெண்பேச்சாக அமையப் பாசுரமிட்டுக் காட்டுகின்ற துடிப்பை ஆழ்வார் தானான தன்மையில் காட்டுகின்ற திருமொழியாகும் இது. பெண் பேச்சாக வெளியிடும்போது வெளிவரும் நெஞ்சுருக்கும் உணர்ச்சி

சாபவிமோசனவல்லி, பெரி. திரு. 4.9 (பதிகம்) பெரி. திருமடல் (59). மேலும் விவரம் வ்ேண்டு மாயின் சோ கா.தி.-(2). கட்டுரை-3 காண்க.

19. திருவாய் 3.3:1