பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 177

களையெல்லாம் இத்திருமொழியில் தானான தன்மையில் அருளிச்செய்த அழகு அற்புதமாக அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம்.

நூம்மைத் தொழுதோம் துந்தம்

பணிசெய் திருக்கும் நும்மடியோம்; இம்மைக் கின்பம் பெற்றோம்

எந்தாய் இந்த ளுர்ரே! எம்மைக் கடிதாக் கருமம்

அருளி ஆஆஎன்(று) இரங்கி, நம்மை ஒருகால் காட்டி

நடந்தால், நாங்கள் உய்யோமே (1)

(இம்மை-இப்பிறவி ஆஆ-ஐயோ கருமம்-கைங் கரியம்; அருளி-நியமித்து ஒருகால்-ஒரு தடவை; காட்டி-சேவை சாதிப்பித்து; நடத்தால்-உலா வினால்}

என்பது முதற் பாசுரம். 'இத்தளுரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! அடியேன் உம்மை வணங்கினேன். நீர் சேவி என்றும், அடியேன் சேஷபூதன் என்றும், அடிமை செய்தலே முறை என்றும் நன்கு அறிந்தே கைங்கரியத்தை நாடுகின்றேன். உம்மைப் பார்ப்பதே கடினமாக உள்ளது. உம்முடைய திவ்விய மங்கள விக்கிரகத்தை ஒரு தடவை யாவது அடியேன் பார்க்கலாகாதா?’ என்கின்றார்.

தொடர்ந்து பேசுவது: நெஞ்சில் நீங்காதிருக்கும் செல்வமே, கட்புலனுக்குச் சிறிது காலமாவது இலக்காகக் கூடாதா? கண்ணாலே கண்டு களிக்கப்பெறும் அது பவத்தை நீர் வஞ்சித்தீராகிலும் மனத்தால் அதுபவிக்க அநுபவிக்க இனிதாயிருக்கின்றதே. அந்தண் ஆலிமாலே சோலை மழகளிறே! நறையூர் நின்ற நம்பி” என்று வேறு

32 سه Esrr . قسt