பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xx

மூன்றாம் இயலில், திருமங்கையாழ்வாரின் வாழ்க்கை பற்றிய விவரங்களை அகச் சான்றுகளைக் கொண்டு, இவர் ஆலி நாட்டிற்கும் குறையல் பதிக்கும் தலைவர், பெருஞ் சேனையை உடையவர், வாட்போரில் பகைவர் உடல் துணிக்க வல்லவர். பெருஞ் செல்வமுடையவர், புலவர் போற்றும் புலமையும், கவிபாடும் திறமையும், வள்ளண்மையும் உடையவர், பரம்பரை பரம்பரையாகத் திருமால் அடியவர், மறந்தும் புறந்தொழாது திருப்பதிகள் தோறும் சென்று பரவும் அடியவர், திருக்குடந்தை ஆராவமுதனிடம் அளவற்ற ஈடுபாடு கொண்டவர் என்பவற்றையெல்லாம் ஆசிரியர் அழகாக விளக்கி யுள்ளார். கோழியில் ஞானசம்பந்தர் சந்திப்பைக் கூறி, ஆழ்வார் கவிபாடி பரிசாக வேல்பெற்ற குறிப்பையும் வரைந்துள்ளார் (பக். 38). இந்த வரலாறு குருபரம்பரை மட்டுமன்றி, உடையவர் காலத்திலே வழங்கப்பட்ட திவ்யசூரி சரிதம், ப்ரபன்னாம்ருதம் முதலிய நூல்களிலும் கூறப்பட்டுள்ளது. மேலும் சீகாழிப் பதிகத் திருமுகத்துப் பாசுரத்தில் ஆழ்வார் தம்மை கொற்றவேல் பரகாலனாக சிறப்பித்துக்கூறிக் கொண்டதும் இதற்குச் சான்று பகரும். ஆழ்வார் திருவரங்கத்துத் திருப்பணிகள் பல செய்தமையை,

மாடமாளிகை சூழ்திரு வீதியும் மன்றுசேர்

திருவிக்ரமன் வீதியும் ஆடல்மாறன் அகளங்கன் வீதியும் ஆலிநாடன்

அமர்ந்துறை வீதியும் கடல்வாழ் குலசேகரன் வீதியும் குலவிசை

மகேந்திரன் வீதியும் தேடரிய தர்மவர்மா வீதியும் தென்னரங்கர்

திருவா வரணமே. என்று கோயில் ஒழுகு அறிவிக்கும். இப்பணிக்கு. நாகப் பட்டினத்தில் இருந்த பொன் பதுமையும் பயன் பட்டது என்பதைப் பட்டர்,