பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 189

இன்னும் பாக்குமரங்கள் நிறைந்துள்ள சோலைகள் எங்கும் வண்டுகள் இசைபாடும்; குயில்கள் கூவும்; மயில் கள் கூத்தாடும். இந்தச் சூழ்நிலையில் அலைகளையுடைய காவிரியின்நீர் பக்கங்களில் சுற்றிப் பாய்தலினால் ஊரின் அழகை மிகுவிக்கும்.

புலம்புசிறை வண்டுஒலிப்ப,

பூகம்தொக்க பொழில்கள்தொறும் குயில்கூவ,

மயில்கள் ஆல அலம்புதிரைப் புனல்புடை சூழ்ந்து

அழகுஆர் செல்வத்து அணி அழுந்துர் (7.8:4)

என்ற பாசுரப் பகுதியில் இதனைக் கண்டு மகிழலாம். ஊருக்கு இயற்கையே பின்னணியாக அமைந்திருப்பதைக் கண்டு வியக்கின்றோம்.

அணி அழிந்துளரின் அழகு: இனி ஆழ்வார் தம் பாசுரங்களில் அணி அழுந்துாரின் அழகையும் காட்டு கின்றார். ஊர் எப்போதும் கார்காலத் தோற்றத்துடன் மிளிரும், காற்றும் துகல்களும் மேகபடலங்களும் சிறப் பாகக் கார்காலத்தில் காணப் பெறும். அதுபோலவே,

துகிலின் கொடியும் தேர்த்துகளும்

துன்னி மாதர் கூந்தல்வாய்

அகிலின் புகையால் முகிலேய்க்கும்

அணியார் வீதி அழுந்துரே (7,5:5)

என்கின்றார் ஆழ்வார். இங்குள்ள மாடமாளிகைகள் மேக மண்டலத்தளவும் ஓங்கியிருக்கும். மாளிகைகளின் முனையிலே பாதுகாப்புக்கு உறுப்பாகச் சூலங்கள் தாட் டப் பெற்றிருக்கும் (இடிதாங்கியாக). அவை மேகங்களின்