பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼登鲁 பரகாலன் பைந்தமிழ்

கீழ் வயிற்றை இடித்துப் பிளக்க, மழை சொரியும்(7.5:6). இவ்வூர் வீதிகள் கடல்போல் நீண்டிருக்கும். மாளிகைகள் சுண்ணச் சாத்திட்டு வெளுத்திருக்கும்; அவை விண்ணுல கத்தனவும் ஓங்கியிருக்கும். சூரியனின் கதிர்களைக் கரும் பாலைப் புகை வந்து மறைத்து எங்கும் நிழல் செய்யும் (7.517).

இங்குன்ன மாதர்கள் தேன் ஒழுகும் கூந்தலையுடைய வர்கள். கோம்புகள் செறிந்திருக்கும் குருக்கத்தியின் மேல்ே, செருக்காலே தளிரையும் பூக்களையும் கோதி மது பானம் பண்ணின வண்டினங்கள், அவற்றைவிட இன்பம் மிகுத்தகோர் இடம் தேடிப் போய இராத் தங்க வேண்டும் என்று எண்ணங் கொண்டு இங்குள்ள மகளிரின் கூந்தற் கற்றையில் ஏதும் (7.5:3), இங்குள்ள பெண்கள் பொன் ஆவழான சிலம்புகளைக் காவிலணிந்து கொண்டு நடனம் செய்வதால் உண்டாகும் ஒலி ஓயாது ஒலித்துக்கொண்டி ருக்கும் (7.8:5). இவ்வூர் மகளிர் கிளியைப் போன்ற இன் சொல்ஜையும் அன்னப்பேடையைப் போன்ற மென்னடை ஒயவும் உடையவர்கள் (7.8:5). திருவிழாக் காலங்களில் ஒருவீதியில் நடைபெறும் விழாக்காட்சிகளைக் காணும் பொருட்டு வீதியின் இரு புறங்களிலுமுள்ள மாளிகையின் திண்ணைகளில் ஆடு ஏறு மலர் குழலார் ஏறி நின்று காட்சிகளைக் கண்ணுறுவர் (7.8:9).

திருவழுந்துரிலுள்ள நான்மறை வல்ல அந்தணர்கள் எப்போதும் ஏதாவதொரு வேள்வியில் ஈடுபட்டுக் கொண் டிருப்பர். இவர்கள் யாவரும் இளைஞர்களே. அவர்கள் மழை பெய்யும் பொருட்டுச் செய்யும் கேள்வியால் அது செய்யப்படும் முன்னரே மழை பொழிந்து விடுகின்றது. காரணம் உண்டானவுடனே ஒரு நொடிப்பொழுதும் தாமதியாமல் காரியம் உண்டாகி விடுகின்றது (5:1) இவ்வூர் மறையவர்கள் எப்போதும் எம்பெருமானைச் சூழ்ந்து கொண்டு துதியா நிற்பர் (7.5:5,6). இவர்கள்