பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 翼姆$

இதையறிந்த கண்ணன் புதிதாக ஓர் ஆநிரையையே உண்டாக்கி ஆயர்களிடம் தந்துவிடுகின்றான். நான்முக னும் தன் பிழையை உணர்கின்றான். அவனது வேண்டு கோளின் படியே திருவழுந்துார் சென்ற பசுநிரையைக் காக்கும் கோவலனாக-ஆமருவி அப்பனாக-அழுந்துார் நின்றுகந்த கோவாக-அழுந்தையில் மன்னி நின்ற தேவாதி தேவனாக எழுந்தருளி விடுகின்றான்.

ஐந்து நிலை எம்பெருமான்கள் : திருமங்கையாழ் வார் ஆமருவி அப்பனை மங்களாசாசனம் செய்யும்போது பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை நிலையிலுள்ள எம்பெருமான்களையும் அதுப வித்து இனியராகின்றார். பரனே... மாதவனே மது சூதா" (7.7:4) என்றும், வெள்ளத்துள் ஒர் ஆவிலை மேவி (7.5:4) என்றும், உலகுண்ட ஒருவா" (7.7:1) என்றும் பரத்துவ நிலை எம்பெருமானைப் பரவுகின்றார். 'ஒலி நீர் உலகங்கள் படைத்தானை (7.6:3) என்று வியூக நிலை எம்பெருமானைச் சிந்திக்கின்றார்.

விபவாவதாரங்களை எண்ணும்போது நரசிம்மன், பரசுராமன், ஆதிவராகம், வாமன-திரிவிக்கிரமன், ஹயக்ரீவன், இராமன், கிருட்டிணன் என்ற இந்த எம்பெருமான்கள் ஆழ்வார் சிந்தையில் எழுகின்றனர். "சிங்கம் அது ஆய் அவுணன் திறல் ஆகம் மூன் கீண்டு’ (7.6:1) என்றும், சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி, திறல் மேவும் இரணியது ஆகம் கீண்டு (7.8:5,) என்றும் நரசிங்கப் பெருமானை நினைக்கின்றார். ஆதி வராகம் முன் ஆனாய்’ (7.7:4) என்றும்

சிலம்புமுதல் கலன்அணிந்து

ஒர்செங்கட் குன்றம் திகழ்ந்ததென திருவுருவம்

பன்றி ஆகி

ப.கா.-13