பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலன் பைந்தமிழ்

இலங்குபுவி மடந்தைதனை

இடந்து புல்கி

எயிற்றடைவைத் தருளிய

ஈசன் (7.8:4}

என்றும் வராகப் பெருமானை அ நுபவிக்கின்றார். பன்னுகலை நால்வேதப் பொருளையெல்லாம் பரிமுக மாக அருளியாம் பரமன் காண்மின் (7.8:2) என்று இயக்கிரீவ மூர்த்தியைப் போற்றுகின்றார்.

வானவர்தம் துயர்தீர

வந்து தோன்றி, மாண்உருஆய் மூவடிமா

வலியை வேண்டி தான்அமர ஏழ்உலகும் அளந்த வென்றித் தனிமுதல்சக் கரப்படைஎன்

தலைவன் காண்மின் (7.8:6)

என்று வாமன-திரிவிக்கிரமாவதாரத்தை அநுபவிக் கின்றார். கோ ஆனார் மடியக் கொலைஆர் மழுக் கொண்டருளும் மூவா வானவன் (7.6:2) என்று பரசு ராமனைப் பகர்கின்றார்.

அவதாரங்களில் இராமனும் கிருட்டிணனும் அதிக இடம் பெறுகின்றனர். இராவணனது பத்துத் தலை களையும் இருபது கைகளையும் அறுத்த (7.5:1; 7.8:7) செயல்களை அதுசந்திக்கின்றார். கண்ணனை நினைக்கும் போதுதான் பார்த்தனுக்குத் தேரேறி சாரதியானது, குன்றேந்தி மாரி தடுத்தது, கஞ்சனைக் காய்ந்தது, பூதனை யிடம் முலையுண்டு அவளது உயிர் குடித்தது, தயிர் நெய் அமுது செய்தமையால் அன்னையால் ஆப்புண்டது, விடை ஏழை அடர்த்தது. கும்பமிகு குவலயாபீடத்தைக்