பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 195

கொன்றது. குரவை கோத்தது, சகடாசுரனை உதைத்துக் கொன்றது போன்ற வெற்றிச் செயல்கள் ஒவ்வொன்றா கத் தோன்றி ஆழ்வாரை மகிழ்விக்கின்றன.

அந்தர்யாமித்துவ எம்பெருமானைச் செவ்வாய் முறுவல் செய்தருளி, மாடுவந்து, என் மனம் புகுந்து நின்றார் (7.5:6) என்றும், அடியேன் மனம் புகுந்து என் நீலக் கண்கள் பனி மல்க நின்றார் (7.5:7) என்றும், "என் நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார்' என்றும் சிந்தித்து மகிழ்கின்றார்.

அர்ச்சாவதார எம்பெருமான்களில் ஆமருவி அப் பனைத் தவிர, திருக்குடந்தைப் பெருமான், நறையூர் நம்பி ஆகிய எம்பெருமான்களையும் அநுபவிக்கின்றார். ஆழ்வாரின் நறையூர் நம்பி அநுபவம் அழகிய மணவாளர் சீயர் என்ற வைணவப் பெரியாரின் உள்ளத்தைக் கவர்ந்து விடுகின்றது. இதனைச் சுவையாக எடுத்துக் கூறுவர் சீயர். இந்த ஆழ்வார் வாக்கினின்றும் நறையூர் நம்பி நூறு பாசுரங்கள் பெற்றிருந்தும் மனநிறைவு பெறாதவ னாய் மீண்டும் வந்து முகம் காட்டினதைக் கண்டு ஆழ்வார் 'திரு நறையூர் நம்பீ!’ (7. 7:4) என்கின்றார். திருவிண்ண கரில் ஆழ்வார் எழுந்தருளியிருக்கும் போது நம்பி எதிர் கொண்டு சென்றதனால் திருநறையூர்த் தேனே!” (8.3:3) என்று பேசினார்." ஆழ்வார் திருநறையூரினின்று மீண்டு திருநறையூர் செல்லுமளவும் கூடவந்து வழிவிட் டுத் திரும்புகையாலன்றோ நறையூர் நம்பி......அழுந்துார் மேல் திசை நின்ற அம்மானே!" (7.7) என்று பேசு கின்றார்' என்பதாக.

15. இப்பாசுர நயத்தைச் சோழ நாட்டுத் திருப்பதி

கள் முதற் பகுதி (கட்டுரை-12) காண்க.