பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திருநாங்கூர்த் திருத்தலப் பயணம்

திருவாலி-திரு நகரியைச் சேவித்த திருமங்கையாழ் வார் திருநாங்கூர் திருப்பதிகளைச் சேவித்திருக்க வேண் டும் ஒரு வழியாகச் சோழநாட்டுத் திருப்பதிகளின் ஒரு பகுதியை முடித்துக்கொண்டு திருநாங்கூர்த் திருப்பதி களைச் சேவிக்கத் திருவுள்ளம் பற்றுவதாகக் கட்டுரை அமைகின்றது. ஒருவித ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக் கவே இந்த அமைப்பு. திருநாங்கூர்த் திருப்பதிகள் பதினொன்று. அவை: 1. திருமணி மாடக்கோயில், 2. திரு வைகுந்த விண்ணகரம், 3. திருஅரிமேய விண்ணகரம், 4. திருத்தேவனார்த்தொகை, 5. திருவண் புருடோத்தமம் 6. திருச்செம்பொன்செய் கோயில், 7. திருத்தெற்றியம் பலம், 8. திருமணிக் கூடம், 9. திருக்காவளம்பாடி, 10. திருவெள்ளக் குளம், 11. திருப்பார்த்தன் பள்ளி என்பவை: யாகும். இவை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலுள்ள (பெரிய திருமொழியில் உள்ள) வ ரி ைச ய கு ம். இந்த வரிசையில்தான் ஆழ்வார் இத் திருத்தலங் களைச் சேவித்திருக்க வேண்டும், அவர் மன்னராதலால் எல்லா வசதிகளும் பெற்றவர். விருப்பப்படியெல்லாம் சேவிக்கலாம். நம் வசதிப் படிதானே நாம் சேவிக்க வேண் டும்? திருநகரியிலிருந்து ஒரு மாட்டு வண்டியை அமர்த்திக் கொண்டு திருவாலியைச் சேவித்தபிறகு திருத் தேவனார்த்

1. சோழநாட்டுத் திருப்பதிகள்-1 காண்க.