பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii

பாடி, பிருந்தாவனம், திருப்பாற்கடல், அயோத்தி, நைமிசாரணியம், துவாரகை, சிங்கவேழ்குன்றம், திருவேங்கடம் ஆகிய 12 வட நாட்டுத் திருப்பதிகளின் அமைப்பு, ஆழ்வார் காட்டும் இயற்கைக் சூழ்நிலை, புராண வரலாறு, ஆழ்வார் தமது பாசுரங்களால் எம்பெருமானை அநுபவித்துப் பாடிய பாங்கு, அப் பாசுரங்களின் வியாக்யான நயங்களில் ஆசிரியர் ஈடுபாடு ஆகியவை படிப்பவருக்கு நல்விருந்தாக அமைந்துள்ளன. நைமிசாரணிலத்திலும், திருவேங்கடத்திலும், ஆர்த்தியின் கனத்தாலே தம் குங்றங்களை விரிவாகப் பேசி, பெரிய பிராட்டியாரை முன்னிட்டுப் பிரபத்தி பண்ணியும், அகோபிலத்தில் எம்பெருமானின் சந்நிதான மகிமை யினால் மிருகங்களும் பகவத் பத்தியில் திளைப்பதை ஆழ்வார் பாசுரங்கள், அவற்றின் வ்யாக்யானம் கொண்டும் ஆசிரியர் விளக்கியிருப்பது படித்து இன் புறத் தக்கது.

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணத்தில், திருவள்ளுர், திருநின்றவூர், திருவல்லிக்கேணி, திரு நீர் மலை திருக்கடல்மல்லை, திருஇட எந்தை, திருக் கடிகை ஆகிய ஏழு பதிகளை ஒர் இயலிலும், காஞ்சித் திருத்தலங்கள் பதினைந்தினை ஒரு தனி இயலிலும், விளக்கியுள்ளார்கள். திருக்கடன்மல்லை பெருமாளின் சயனக்கோலத்தை விளக்குமிடத்து, 108 திவ்ய தேசங் களில் இருபது தலங்களில் திருமால் சயனக்கோலம் கொண்டுள்ளதையும், சயன கோலங்களின் வகைகளையும் தெரிவித்து, அவ்வூர்த் திருமொழியில், திருமங்கை மன்னன் பகவத்பக்தியின் எல்லை நிலமான பாகவத பக்தியில் தாம் ஊறினபடியை,

தண்ணார்ந்த கடல்மல்லைத்

தலைசயனத் துறை வாரை எண்ணாதே இருப்பாரை

இறைப்பொழுதும் எண்ணோமே