பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருதாங்கூர்த் திருத்தலப் பயுணம் 器馨犀”

தலைவனானவன் வந்து நித்தியவாசம் பண்ணுகிற தேளம் என்பது.

எம்பெருமாள் : இங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் இந்திரன், இமையவர் முனிவர்கள், நான்முகன், கதிரவன், சந்திரன் இவர்கட்குத் திருவருள் பாலித்தவன் (4) பிரளயாபத்தில் ஆகாயம், கடல்கள் தீவுகள், குலவரைகள் இவற்றையெல்லாம் திருவமுது செய்து உய்யக் கொண்ட பிரான் (3) பாலகனாய் ஏழுல கத்தையும் உண்டு. ஆலிலையில் களைப்பாறியவன் (6). இரணியாசுரனைக் கிழித்தழிக்க நரசிம்மனாக எழுந்: தருளியவன் (7). குவலயாபீடம் என்ற மதக்களிற்றினைப் பாகனோடு அக்களிற்றின் தந்தத்தைக் கொண்டே அழித்தவன் (9). சீதாப் பிராட்டியை மணம் புணர்வதற் காக வயிரம் பற்றிய திண்ணிதான வில்லை முறித்தவன் (8), இந்த எம்பெருமான்களே (வியூகம், விபவ அவதாரங் கள்) திருத்தேவனார் தொகையில் எழுந்தருளியிருப்பவன் (அர்ச்சையாக) என்று பாசுரங்களில் தெரிய வைக் கின்றார் ஆழ்வார். இந்தத் தலத்தைச் சேவித்த ஆழ்வார் திருக்கூடலூர் வந்து அதனையும் சேவித்துக் கொண்டு' 'திருமணிக் கூடம் என்ற திவ்விய தேசத்திற்கு வருகின்றார்.

8. திருமணிக்கூடம் : திருமங்கையாழ்வார் மட்டி லுமே ஒரு திருமொழியால் (4.5) இத்திருத்தலத்தை மங்களா சாசனம் செய்துள்ளார். இத்திருத்தலம் மண் சாலைக்கருகில் ஒரு புளியந்தோப்பில் உள்ளது.

3. சோழநாடுத் திருப்பதிகள் 3 என்ற கட்டுரையைக்

காண்க. (கட்டுரை-11)

4. திருமணிக்கூடம் : இது திருநாங்கூர்த்திருப்பதி களுள் எட்டாவது. இத்திருத்தலம் சீகன • பூர்தி நிலையத்திலிருந்து சுமார் இ கி.ம் தொலைவில் உள்ளது. திருநாங்கூர்