பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

畿毅意 பரகாலன் பைந்தமிழ்

தலச்சூழ்நிலை : இத்திருத்தலத்தின் சூழ்நிலையை ஆழ்வார்,

தேம்பொழில் கமழும் நாங்கூர்த்

திருமணிக் கூடம் (1)

தேம்பொழில்-தேன்மிக்க சோலை)

என்று சோலை வளத்தைக் காட்டுவர். காவிரியாற்றின் டாய்ச்சல் எங்கும் பரவிக் கண்டவிடங்கள் எங்கும் பொற்குவியல்கள் குவிக்கப் பெற்றுள்ளன; எம்மருங்கும் தேன் மிக்க சோலைகள் உள்ளன. மங்கைமார் தங்கள் கோங்கைத் தடத்தில் அணிந்திருந்த குங்குமச் சேறுகளை தீர்த்தமாடுங்கால் நீரில் கழுவ, அவற்றோடு கூடிப் பெருகும் காவிரியாற்று நீர் நறுமணம் கமழுகின்றது {2} சோலைகளில் குரங்குகள் முந்துறத் தேமாங்கனியைப் புசித்து அதன் சுவை தெவிட்டவே, அதனை மாற்றுவதற்கு வாழைப் பழங்களை நுகர்கின்றன; அப்போது மதுவைப் பருகுவதற்காக ஏற்கெனவே அப்பழங்களில் படிந்திருந்த வண்டினங்கன் வெருவியோடுகின்றன (4). பொதிய மலை வினின்றும் நறுமணத்துடன் புறப்பட்ட தென்றல் மின்தங்கள், வயல்கள், காவுகள், மாடங்கள் இவை தோறும் புகுந்து வீசுகின்றது (7). தாமரைப் பூவில் தேன் வெள்ளம் அதிகமாகி நீரில் பெருகுகின்றது. அதனைப் பருகுவதால் கொழுத்த வாளை மீன்கள் களிப்பாலே பாய் கின்றன; செங்கயல்கள் அதனைக் கண்டு அஞ்சித் துள்ளி வேறிடத்திலுள்ள நீர் நிலைகட்குப் பெயர்கின்றன களை மாட்டு வண்டியைத் துணை கொண்டு தான் சேவிக்க வேண்டும். எம்பெருமான்: மணிக் கூட _நாயகம்; நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய န္ကို மண்டலம். தாயார்: திருமா மகள் நாச்சியார்.பெரி.திரு. 4.5 (பதிகம்) மேலும் விளக்கம் வேண்டுவ்ோர் சேர். நா. தி. (2) கட்டுரை-18 காண்க.