பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த் திருத்தலப் பயணம் 忽貌器

(8) இவ்வூரிலுள்ளார் வேதங்களைக் கற்றுத் துறை போய வித்தகர்கள்; இவர்கள் ஆசையுடன் அறங்களை அநுட் டித்துக் கைவண்மையால் தீ வளர்த்து ஒம்புகின்றனர். (3). பண்டொருகால் பாண்டிய மன்னன் படையெடுத்து வந்த பொழுது அவனை வெருட்டி ஒட்டி விட்டனர் இவ்வூரிலுள்ள அந்தணர்கள்; பிரிதொரு சமயம் சோழ அரசனையும் அப்படியே தோற்கடித்து ஒட்டினராம் (6). இந்த ஊர்த் திருமாளிகைகள் சந்திர மண்டலத் தையும் எட்டும் படியாக உள்ளன (10),”

எம்பெருமான் : இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை ஆழ்வார் பலபடப் புகழ்ந்து பேசு கின்றார். இவன் கசேந்திரனின் துயரைத் தொலைத் தருளியவன்; கோவர்த்தனத்தைக் குடையாகப் பிடித்துக் கோநிரையைக் காத்தருளிய கோமான் (1). பூதனையின் நஞ்சு தோய்ந்த முலையை உண்பதுபோல் பாவனை செய்து அவள் உயிரை உறிஞ்சியவன்; இலங்கை நகர்மீது கடுமையான கணைகளைச் செலுத்தி இராக்கதப் பூண்டு களை அழித்தவன் (2). குதிரை வடிவாக வந்த கேசி என்னும் அரக்கனை வாய் கிழித்து வானுலகுக்கு ஏற்றிய வன்; இரட்டை மருத மரங்கள் இற்று முறிந்து விழும்படி தவழ்நடை கற்றவன்; ஏழு காளைகளை அடக்கிப் பின்னைப் பிராட்டியை மணந்தவன் (3). குவலயாபீடம் என்னும் யானையின் தந்தங்களைப் பறித்து யானையை யும் பாகனையும் கொன்றவன்; குருந்த மரத்தை முறித் தொழித்த கோவலன்; கொக்கு வடிவமாக வந்த பகாசுரன் என்ற அசுரனை வாயைக் கிழித்து வானுலகுக்கு அனுப் பியவன் (4). சூர்ப்பணகையின் மூக்கையும் காதையும்

5. இன்று இச்சூழ்நிலைகள் சிறிதேனும் இல்லை. கடவுளே கிைவிட்ட இடத்தைத்தான் (Godfor saker place) காண முடிகின்றது. ஏதோ ஓரினவு தோப்புகள் உள்ளன; அவ்வளவே.