பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த் திருத்தலப் பயணம் 265

அடுத்து,

காவனம் பாடித் திருப்பதியைச் சேவிக்கத்

திருவுள்ளம் பற்றுகின்றார் ஆழ்வார்.

9. காவளம்பாடி : திருமங்கையாழ்வார் மட்டி ஆம் இத்திருப்பதி எம்பெருமானை ஒரு திருமொழியால் (4, 6) மங்களா சாசனம் செய்துள்ளார்.

நாங்கை நாட்டுவளம் : இத்திருமொழியில் தாங்கை நாட்டுவளம் நவிலப்படுகின்றது. நாங்கை நாட்டு நிலைகளில் கயல் மீன்கள் அச்சத்தால் துள்ளி யோடுகின்றன; மலர்களில் வண்டுகள் ஆரவாரத்துடன் தேனை நுகர்ந்து இன்புறுகின்றன (4). நாட்டின் சோலை

7.

காவளம்பாடி : இத்திருத்தலம் கீகாழி இருப்பூர்தி நிலையத்திலிருந்து சுமார் பத்துக் கி. மீ. தொலை வில் உள்ளது. திருநாங்கூர்த் திருப்பதிகளில் இஃது ஒன்ப்தாவது திருமணிக்கூட்த்திலிருந்து மாட்டு வண்டியில் வரலாம். இங்கிருந்து 4கி.மீ. தொலைவிலுள்ளது. எந்த வசதிகளும் இல்லாத ஒரு சிற்றுார். எம்பெருமான் : கோபால கிருஷ்ணன், கண்ணன்; நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார் : மடவரல் நாங்கை செங்கமல வல்லி நாச்சியார்.

இத்திருக்கோயிலின் வழிபாடு காலை ே மணிக்குத்தான் தொடங்குகின்றது. இந்த நேரத்தைத் தவிர வேறு நேரத்தில் வந்தால் சேவைக் கிடைக்காது. இத்திருக்கோயிலிலிருந்து ஒன்றரைக் கி. மீக்குக் கிழக்குத் திசையில் திருமங்கையாழ்வார் அவதரித்த குறையலுக் என்ற சிற்றுார் உள்ளது. இதற்கு எதிர்த்திசை யில் முக்க்ால் கி. மீ. தொலைவில் திருமங்கையாழ்

வார் நாடோறும் 1008 அடியார்க்குத் திருவாரா

தனம் செய்த மங்கைமடம் என்ற சிற்றுார் உள்ளது. பெரி. திரு 4, 6 (பதிகம்) மேலும் விளக்கம் வேண்டுவோர் சோ.கா.தி. 2 கட்டுரை -

19 காண்க. o