பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த் திருத்தலப் பயணம் 20?

திரனைச் செற்று, விரைந்து நந்தவனத்தின் அழகை அழித்து கற்பகத் தருவினை பூமிக்குக் கொண்டு வந்தவன் (8), காயத்ரீ, த்ரிஷ்டுப், ஜகதீ, அதுஷ்டுப், பங்க்தி என்று சொல்லப் பெறும் சந்தஸ்ஸுக்களெல்லாம் தானாக இருப்பவன்; எழுத்துகளின் எண்ணிக்கை கொண்டு சந்தஸ்ஸ்-களின் பெயர்களை அறுதியிட்டவன்; பஞ்ச பூதங்கட்கு நியாமகன்; காரியப் பொருள்கள் யாவும் அழிந்து கிடந்த காலத்து எல்லாம் தன் பக்கலிலே ஐக்கிய மாகித் தானொருவனே என்னும்படி நிலைபெற்றிருப் பவன்; இவற்றையெல்லாம் பாகுபாடு செய்து காரியங் கொள்ள நினைத்த காலத்து இவற்றுக்கெல்லாம் காரண பூதனாக நின்ற வன்; இவ்விதமாக அருமறைகளால் உணர்த்தப்படுபவன் (9). காவளம் பாடிக் கண்ணனைச் சேவித்த கலியன் திருப்பார்த்தன் பள்ளிக்குப் போகச் சித்தமாகின்றார்.

19. திருப்பார்த்தன் பள்ளி : திருமங்கையாழ் வார் ஒரு திருமொழியால் (4, 8) இத்தலத்து எம்பெரு மானை மங்களா சாசனம் செய்துள்ளார். இத்திருமொழி "தாய்ப் பாசுரமாக' நடைபெறுகின்றது. பரகால நாயகியைப் பெற்றெடுத்த திருத்தாயார் பார்த்தன் பள்ளிப் பெருமானிடத்தில் தன் மகள் காதல் கொண்டு

8. திருப்பார்த்தன் பள்ளி : திருநாங்கூர்த் திருபபதி களுள் இது பதினொன்றாவது திருப்பதியாகும். பார்த்தனுக்காச் சேவை சாதித்த இடமாதலால் இத்திருப்பெயர் இபற்றது. இது கோழி இருப் பூர்தி நிலையத்திலிருந்து பத்துக் கி.மீ. தொலைவி லுள்ளது. திருநாங்கூரிலிருந்து 4 கி மீ. தொலைவு. எந்தவித வசதிதளும் இல்லாத ஊர். எம்பெருமான்: தாமரையாள்கேள்வின்; நின்றதிரு. கோலம்; மேற்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார்: தாமரை நாயகி. பெரி.திரு. 4, 8 (பதிகம், மேலும் விவரம் வேண்டுவோர் சோ கட்டுரை 20 காண்க. :