பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీశ్రీ பரகாலன் பைத்தமிழ்

இருக்கும் திசையை வெளியிடுகின்றாள்; அப்பெருமானை தினைந்து வாய் வெருவிக் கூறும் படிகளை ஒவ்வொரு பாசுரத்திலும் ஒவ்வொரு வகையாகக் கூறுகின்றாள்.

கலன யானைத் கொம்பொ சித்த

கண்ணன் என்றும் காம ருசீர்க் குவளை, மேகம் அன்ன மேனி

கொண்ட கோன்என் ஆனை என்றும், தலள மாடம் நீடு தாங்கைத்

தாமரையாள் கேள்வன் என்றும் பவள வாயாள் என்ம டந்தை

பார்த்தன் பள்ளி பாடு வாளே (1)

fகவனம்-யானையின் உணவு: ஒசித்த-முறித் தொழித்த; காமரு (காமம்+தரு) . ஆசையை விளைவிக்கின்ற; சீர்-அழகு; அன்ன-ஒத்த; மேனி - உடல்; கோன் - சுவாமி, தவளம் - வெண்மையான;

என்பது முதற் பாசுரம், பார்த்தன் பள்ளியில் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானை எப்படி எப்படியெல் வாம் என் மகள் அநுபவிக்கின்றாள் தெரியுமா? 'குவலயா பீடம் என்ற யானையின் கொம்புகளைச் சேற்றிலிருந்து முள்ளங்கியைப் பிடுங்குவது போல எளிதில் பிடுங்கி அதன் உயிரைத் தொலைத்திட்ட கண்ணன்; அப்படிப்பட்ட சூரன் அவன். அவனது திருமேனியின் நிறம் குவளை மலர், காள மேகம் இவற்றின் நிறத்தையொத்துக் கண்ணைக் கவரும் திறத்தது, யானையை எத்தனை தடலை பார்த்தாலும் ஒவ்வொரு தடவையும் கிடைத்தற் கசிய பொருன்போல் காணப்பெறுவது போலவே, தன் கண்ணனும் அப்பொழுதைக்கப்பொழுது ஆராஅமுதமாக இருக்கின்றான்' என்கின்றாள்.(1). 'யானையை முடித்த செய்தியை ஒரு தடவை சொல்லி முடியக் கூடியதோ?