பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiii

என்ற பாசுரத்தை எடுத்துக் காட்டியுள்ளார். திருஇட எந்தையில் நாயகி பாவனை அடைந்த ஆழ்வாரின் தாய்ப்பாசுர நயத்தை எடுத்துக் கூறும்போது, சேதந னுடைய செயல் தொகுதிகள் யாவும் பேற்றுக்கு சாதனம் அன்று: எம்பெருமானுடைய திருவுள்ளத்தில் இயல்பாகவே சுரக்கும் இரக்கமே பலனைப் பெறுவிக்க வல்லது என்ற சீரிய மறைப்பொருளை பேராசிரியர் கூறியுள்ளது ஆழ்ந்து அநுபவிக்கத் தக்கது.

காஞ்சித்தலப் பயணத்தில் திரு அட்டபுயங்கரம்" என்று திவ்விய தேசத்திற்குப் பெயர் கொடுத்து, ஆனால் அட்ட புயகரம் என்ற திருநாமமே பொருத்தமுடையது என்பதனைத் தெரிவித்து, இப்பதிக்கு ஆழ்வார் நாயகி பாவனையில் மகள் பாசுரமாக அருளிச் செய்த பாசுரங் களை விளக்க, காதல் வெறி, பக்தி வெறி ஆதியவற்றின் தன்மையை முதலில் தெரிவித்து, அந்தப் பின்னணியில் பாசுரங்களின் நயத்தை ஒரு நாடகக் காட்சிபோல் சித்திரித்துள்ளது பேராசிரியரின் சொல்வளம், பாசுரங் களை அநுபவித்த பாங்கு, அதில் ஆழங்கால்பட்டமுறை இவற்றைக் கண்டு மகிழலாம். ஆழ்வார் காலத்தில் தனிச் சந்நிதியில் சீரும் சிறப்புமாக விளங்கி, ஆழ்வார் மங்களா சாஸ்னத்தைப் பெற்ற நிலாத்திங்கள் துண்டப்பெரு மாளும், கள்வனுTர் பெருமாளும்பிற்காலத்தில் சிவாலயத் தின் பிராகாரத்தில் ஒருபுறத்தில் ஒண்டிக் குடித்தனமாக' எழுந்தருளியிருப்பது எ ண் ணி வருந்தத்தக்கது. பேராசிரியர் அவர்கள் மறந்தும் புறந்தொழா மாந்தர்' நிலையிலுள்ள சில குறுகிய நோக்கமுடைய வீர வைணவர் தேவையற்ற தம் பத்தினித்தனத்தால் வழி படாது இருப்பது பரந்த நோக்கு உடைய வைணவர் களுக்கு வருத்தத்தை விளைவிக்கின்றதாக, முதலில் வீர வைணவர்களைச் சாடி, பரந்த நோக்குடைய வைன வர்கள் என்று ஒரு போலிச் சமரவலத்தை கற்பனை செய்து' எம்பெருமானே அவர்கள் பரிதாப நிலை கண்டு