பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 if பரகாலன் பைந்தமிழ்

நீ. ஆயினும் கையிலே கோலைக் கொண்டு கறவைகளின் பின்னே சென்று அவற்றை மேய்த்தாய் (7). பூமியைப் பிரளயம் கொண்ட காலத்தில் வராக அவதாரம் எடுத்து அதனை இடந்து எடுத்தாய். நாராயணன் என்று பேர் பெற்றுள்ளாய். சரீரத்திற்கு நன்மை செய்ய வேண்டுவது சரியான ஆன்மாவின் கடமையன்றோ? (8). இப்படி தெல்லாம் பலருக்குப் பல்வேறு விதமாக அருள்பாலித்த நீ அடியேனுக்குச் சிறிது அருள் செய்து துன்பங்களைப் போக்கலாகாதா” என்று பாசுரங்கள் தோறும் பன்னிப் வன்னி வேண்டுகின்றார் ஆழ்வார். இறுதியாக, *பிராட்டியானவன் உன்னை விட்டுப் பிரியாதிருக்கவும் தான் இழப்பது என்னோ?” என்ற கருத்தையடக்கிப் ஆனர் திருமணமகள் புல்கிய மார்பா' (9) என்று விளிக்கின் தனர். தம்மாழ்வார் . அகலகில்லேன் இறையும்’ என்று அலர்மேல் மங்கை உறைமார்பா' (திருவாய் 6. 19: 16) ன்து பேசினது இத்துடன் ஒத்திருப்பதைக் கண்டு மகிழ லாம். அடுத்து, மணிமாடக் கோயிலைச் சேவிக்கத் திருவுள்ளம் கொள்ளுகின்றார்.

42. மணிமாடக்கோயில்’ : இதனை நாராயணர் கோயில் என்றும் வழங்குகின்றனர். நாங்கூர் என்பது T கனிடெக் கோவில் : திருநாங்கூர்த் திருப்பதி களுள் இது முதலாவது திருத்தலமாகும். சீகாழி இருப்பூர்தி நிலையத்திலிருந்து சுமார் 8 கி. மீ. தொலைவிலுள்ளது திருநாங்கூர்த் திருப்பதி கள் பதினொன்றையும் மாட்டு வண்டியின் துணை கொண்டே சேவிக்க வேண்டும். எம்பெரு மான் : நந்தாவிளக்குப் பெருமாள், நாரர் யணன்; இருந்த திருக்கோலம், கிழக்கு நோக்கிய திருமிக மண்டலம் தாயார் : புண்ட்ரீக்வல்லித் தாயார். உற்சவர் குள்ளமாயும் அமைதியாயும் காணப்படுகின்றார். பெரி. திரு. 3.8 (பதிகம்); பெரி. திருமடல்(68) மேலும் விவரம் வேண்டு வோர் சோ. கா. தி. (2) என்ற கட்டுரை 11 $瓣需。