பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiv

கழிவிரக்கம் கொள்ளுவதாகச்' சித்திரிப்பது பேராசிரி யரின் உண்மை மனநிலை தெரிவிக்கின்றது.

நடுநாட்டுத் திருத்தலப் பயணத்தில், நடுநாடு என்பதன் சிறப்பு, அசித்தை எம்பெருமான் உடலாகக் கொண்டிருப்பதால் அழகு தவழும் இடங்களில் எம்பெரு மான் கோயில் கொண்டுள்ள தன்மை கோங்கரும்பு, சுரபுன்னைக் குரவுஆர் சோலைக் குழாம் வரிவண்டு இசை பாடும் பாடல்கேட்டு தீங்கரும்பு கண் வளரும்’ என்ற பாடல் பகுதிக்கு பேராசிரியர் தேனும் பாலும் அமுதும் கன்னலுமாக அளித்துள்ள பொருள் நயம் ஆழ்ந்து அநுபவிக்கத்தக்கது. திரு அயிந்திரபுரப்பயணத்தில் வண்டு என்பதின் உள்ளுறைப் பொருளை ஆசார்ய ஹ்ருதய நூலை ஒட்டி அளித்துள்ள விளக்கமும், அதனைக் கொண்டு திவ்விய தேசப் பாசுரத்தில் பல விளக்கங்களும், பேராசிரியரின் ஆழ்ந்த ஞானத்தையும், அதில் அவர் ஆழ்ந்து, நம்மையும் தோய்ந்து அநுபவிக்கச் செய்வது உணரத்தக்கது.

சோழ நாட்டுத் திருத்தலப் பயணத்தை, ஈரிருபதாம் சோழம் என்ற 40 தலங்களையும் பேராசிரியர் 158 பக்கங்களில் மூன்று பகுதிகளாகப் பிரித்து, அநுபவிக் கிறார். திரு நாங்கூர்த் திருத்தலப் பயணத்தில் ஊர் வளம், தலச் சூழ்நிலை, தலத்து எம்பெருமான் சிறப்புகள், தத்துவக் கருத்துக்கள் ஆகியவற்றை அழகாக அநுபவிக்கக் செய்கிறார். மேலும், இந்த திவ்வியதேசப் பயணத்தில் ஆழ்வார் ஆங்காங்கே இந்த திவ்விய தேசம் பற்றி அருளியுள்ள பாசுரக் குறிப்புகளையும் தொகுத்து, ஆழ்வார் அநுபவ உணர்ச்சிகளையெல்லாம் படம் பிடித்துக் காட்டுகிறார்.

சிறுபுலியூரில் பாகவத வைபவத்தை ஆழ்வார் அருளிச் செய்துள்ளதைப் பேராசிரியர் அவர்கள் 'சிறு புலியூர் என்ற திருத்தலமும் வேண்டா, அங்குள்ள சல சயனத்திருக்