பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த் திருத்தலப் பயணம் 2

کیستی اعتمامی

3.

Þ

என்கின்றார். மல்லிகை சுரபுன்னை சண்பகம் முதலியவை எங்கும் அடர்ந்திருப்பதனால் அவற்றின் நறுமணம் நிறைந்துள்ளது. நீரை விட்டுப் பிரிந்தால் ஒரு நொடிப் பொழுதும் வாழமாட்டாத மீன்களும் நீர் உறுத்துவதாகக் கொண்டு அதைவிட்டு நீங்கி அதனைவிட நிலம் மிதிதானே நன்றாயிருக்கின்ற சோலையிலே வந்து சேர்ந்து அச் சோலையின் நறுமணத்தை முகர்ந்து கொண்டு துள்ளி விளையாடுகின்றனவாம். பார்த்த விடமெங்கும் பெரிய செந்நெற் பயிர்களும், இளந்தென்னை மரங்களும், வெற் றிலைக் கொடிகளும், அழகிய குலைகளையுடைய பாக்கு மரங்களும் ஒன்றுக் கொன்று மீறிக் கொண்டு செழித்து வளர்ந்துள்ளன; வண்டுகள் பலவிதமான இன்னோசை கள் எழுப்ப, அவற்றிற்கேற்ப மயில்கள் நடனம் ஆடு கின்றன (3).

திருத்தலத்தைச் சுற்றியுள்ள கழனிகளில் செந்நெல் களும், தாமரைப் பூக்களும், மீன் வகைகளும், செங்கழு நீர் மலர்களும் சேர்ந்து கொண்டு கழனிகள் உள்ள இட மெங்கும் திகழ்கின்றன. வெளியில் நோக்கினால் வயல் களின் வளம் சொல்லுக்கு எட்டாதது; உள்ளே நோக்கி னால் வைதிகர்களின் செழிப்பு சொல்லுந் தரமன்று (5). இளங்கமுக மரங்களும், குலைகள் நிறைந்த தென்னை மரங்களும், வெற்றிலைக் கொடிகளும் நெற்பயிர்களும், கரும்புகளும் எம்மருங்கும் செழித்து ஓங்கி வளர்ந்துள் ளன (?). தாமரை மலர்களினின்றும் செங்கழுநீர் மலர் களினின்றும் தேன் வெள்ளமிட்டுப் பாய்கின்றது; வய லிலுள்ள உழவர்கள் இப் பெரு வெள்ளத்தினால் பயிர்கள் அழிந்திடும் என்று அஞ்சி மடைகளை அடைக்கின்றார் களாம் (8). கயல், வாளை, சேல் என்னும் மீன்வகைகள்

கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார்: வைகுந்தவல்லி. பெரி. திரு 3.9 (பதிகம்) மேலும் விவர்ம் வேண்டுவோர் சோ. நா. தி-(2) கட்டுரை 10 காண்க.