பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த் திருத்தலப் பயணம் &念念

மென்மருங்குல் மெல்லியற்காக இலங்கை வேந்தனின் பத்துத் தலைகளையும் பனங்காய்கள் போல் சிதறியோடச் செய்து அவனது இருபது தோள்களும் சின்னபின்னமாம் படி செய்து இலங்கை நகரையும் பொடி படச் செய்த சூரன் (5). அழகிய பெண் உருவங்கொண்டு நஞ்சு தீட் டிய முலையுடன் வந்த பூதனை பேய் வடிவத்துடன் மாயும்படியாக அவளது உயிரை உண்டவன்; இரட்டை மருத மரங்களை முறித்துத் தள்ளினவன்; சகடாசுரனைச் சாடியவன் (6). இளங்கன்று வடிவாக வந்த வத்சாகர னைத் துரக்கி விளாமரத்தின்மீது ஆவேசித்திருந்த கபித்தாசுரன் மேல் எறிந்து இருவரையும் ஒரு சேர ஒழித் தவன்; இடைச்சியர் வீடுகளில் உறிகளில் சேமித்து வைத் திருந்த தயிர் வெண்ணெய் நெய்பால் முதலியவற்றைத் தன் திருவுள்ளம் குளிரும்படித் திருவமுது செய்தவன் (7). தீட்சணியமான திருவாழியால் நரகன் உயிர் தொலைத்த நாயகன்; பெரிய பிராட்டியாருக்கும் சிவபெருமானுக்கும் பகுதியாகக் கொடுத்த திருமேனியையுடையவன் (8). வானவர்களும் மாமுனிவர்களும் ஒருங்கு கூடிச் சிறந்த மலர்களைக் கொண்டு அருச்சிக்கப் பெற்ற எம்பெருமான் (9). சங்கம்:சக்கரம் தண்டு முதலிய திவ்வியாயுதங்களை ஏந்திய தாமரைக் கண் நெடிய பிரான் அமர்ந்த நிலையில் காட்சி தருபவன் (10). அடுத்து, அரிமேய விண்ணகரத் தைச் சேவிக்கத் திருவுள்ளம் பற்றுகின்றார்.

14. அரிமேய விண்ணகரம்: இத் தலத்து எம் பெருமானை திருமங்கையாழ்வார் ஒருவரே மங்களா சாசனம் செய்துள்ளார் (3. 10),

13. அரிமேய விண்ணகரம்: அடியவர்களின் பாபங்

களைப் போக்குவதனால் 'ஹரி எனபபடுகின்ற எம்பெருமான் நித்திய வாசம் செய்யப் பெற்ற தலம். இத்திருப்பதி மணிமாடக் கோயிலிலிருந்து (இக்கட்டுரையில்-12வது) சுமார் ஒரு ஃபர்லாங்