பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த் திருத்தலப் பயணம் 225

مصمسع مساحة

சேரும். அவை மீன்களின் வயிற்றில் புகும்; அவை அறுவடையில் வெளிப்படுகின்றன. (6). புனல் அலை யெறிந்து துறைகள்தோறும் முத்துகள் கிடக்குமிடம் (?). சோலைகளில் பறவைகளின் ஒலிகளும் அப்போத லர்ந்த செவ்விய பூக்களில் வண்டுகள் தேனைப் பருகின களிப்புக்குப் போக்கு வீடாகச் செய்யும் இன்னோசைகளும் கேட்கப் பெறுகின்றன (8), காவிரியாறு சந்தனமரங் களையும், அகில் மரங்களையும் நவரத்தினங்களையும் தள்ளிக்கொண்டு வந்து சோலைகளிலும் வயல்களிலும் அவற்றிற்குச் செழிப்பினை உண்டாக்குகின்றது (9).

நகர்வளம் : ஆழ்வாரின் நற்றமிழ்ப் பாசுரத்தில் நகர் வளத்தையும் காண முடிகின்றது. மிக்க புகழ் படைத்த வேதியர்கள் வாழ்கின்ற ஊர் திருநாங்கூர் (1). இவர்கள் சாத்திரங்களை நன்கு கற்றவர்கள்; ஆன்ம குணம் நிறைந்தவர்கள் (2). அழகிய மகளிர் நிறைந்து வாழுமிடம் (3). மனத்தாலும் வாக்காலும் பகவானது மந்திரங்களையும், நான்மறைகளையும், வேதாங்கங்களை யும், மற்றுமுள்ள கலைகளையும் கரைத்துக் குடித்து ஆசாரம் நிறைந்த வைதிகர்கள் வாழும் இடம் (7). கொடி கள் பொதிந்த மதில்களும் மாட மாளிகைகளும், கோபுரங் களும், நெருங்கிய மணிமயமான மண்டபங்களும், அறச் சாலைகளும் கும்பல் கும்பலாக அந்தணர்களும் நிதைத் திருக்கும்.ஊர் (8). பரம வைதிகர்கள் சிறந்த மலர்களைக் கொண்டு எம்பெருமான் திருவடிகளே சரணம் எனக் கூறி அருச்சிக்கும் அந்தணர்கள் வாழுமிடம் (9). வேதம் ஒதுவதில் நான்முகனையும், அழகில் முருகனையும் ஒத்திருக்கும் அந்தணர்கள் நிறைந்திருக்கும் ஊர் (10).

தலத்து எம்பெருமான் : இங்கு எழுந்தருளியிருக்கும்

எம்பெருமான் பெருமைகளில் ஆழ்வார் ஆழங்கால் பட்டு

அநுபவித்ததைக் காண்போம், குற்றங் குறைகட்குக்

|ப.கா.-15