பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு நாங்கூர்த் திருத்தலப் பயணம் 227

பிளந்து கொன்று அவன் மகன் பிரகலாதன் திறத்துப் பேரருள்.செய்த பெருமான் (4). கண்டவர்கள் மனம் களிக் கும்படி மாவலியின் யாக பூமியில் வாமன மாணியாகச் சென்று மூவடி மண் இரந்து பெற்று மேலுலகங்களையும் மற்றும் எல்லாவற்றையும் அளந்து கொண்ட எம்பெரு மான் (3). வாள் நெடுங்கண் மலர்க் கூந்தல் மைதிலிக்காக இலங்கை மன்னன் இராவணனைக் கொல்ல சிலை வளைத்தி தயரதன் சேய், ஆழ்வாரின் ஒப்பற்ற இரட்ச கன். நித்திய சூரிகளின் தலைவன் (6). தீ மனத்துக் கம்சனின் கபடச் செய்கைக்கிணங்கக் கெட்ட எண்ணத் துடன் திரிந்து கொண்டிருந்த தேனுகனையும் நஞ்சு தீட்டிய முலையுடன் வந்த பூதனையையும் முடித்தவன். காமனைப் பயந்த கரிய திருமேனியுடைய அம்மான் (7). கன்றதனால் விளவெறித்து கனியுதிர்த்த காளை; காமகு சீர்முகில் வண்ணன். இந்திரன் பசிக் கோபத்தினால் ஏழு நாள் விடாது கல்மாரி பொழிந்தபோது கோவர்த் தனத்தைக் குடையாகப் பிடித்துக் கன்றுகளையும் இடை யர்களையும் காத்தருளின் கோமான்; இடைச் சாதியின் மெய்ப்பாடு தோன்றக் குடக் கூத்தாடியவன்; திருமங்கை யாழ்வார் இத்தலத்து எம்பெருமானுக்குக் குடமாடு கூத்தன்” என்ற திருநாமம் சூட்டுகின்றார் (8), பேய் வடிவை மறைத்துத் தாய் வடிவுடன் நஞ்சு தீட்டிய முலை யோடு வந்த பூதனையின் பாலை அவள் உயிரோடு அமுது செய்தவன்; அந்த நஞ்சுக்கு மாற்றாகத் தயிர் வெண்ணெய் முதலியவற்றை வாரி உண்டவன்; கம்ச னுடைய உயிர் குடித்தவன். உலகம் உண்ட பெருவாயன் (9). வலிமிக்க ஏழு காளைகளின் வலியடக்கி பின்னைப் பிராட்டியின் செவ்விய தோளைப் புணர்ந்துகந்த பெருமான் (10). இத்தகைய பெருமை வாய்ந்த பெரு

14. கண்ணன் உருக்குமிணிப் பிராட்டியிடம்

மன்மதன் அம்சமாகப் பிரத்தியும்ன்னைப் பிறப்

Iத்தவன.