பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த் திருத்தலப் பயணம் 335

என்று குறிப்பிடுவர். இங்கு எழுந்தருளியிருக்கும் பிறப்பில் பல்பிறவிப் பெருமான் மூப்பின்றி என்றும் இளையவனா யிருப்பவன்; பேதியா இன்ப வெள்ளத்தன்; எக்காலத்தும் நிலை பெற்றிருப்பவன்; ஏழிசைகளிலும் உண்டாகும் சுவையே வடிவு கொண்டாற் போன்றவன்; மறைகளில் கூறப் பெறுபவன்; தேவாதி தேவன் (2). பஞ்சபூதங்கள், இருசுடர், பூமியிலுள்ள உயிர்கள், உயிரற்ற பொருள்கள் இவற்றிற்கு அந்தர்யாமியாக இருப்பவன்; கடல் நிற வண்ணன் (3) வாமன மானியாக மாவவியின் யாக பூமியில் மூவடிமண் இரந்து பெற்று உலகளந்தவன்; நித்திய சூரிகள் அடியினை வணங்க அலையெறி பாற் கடவில் துயிலும் பரமன்; அனைவரையும் காப்பதற்கு அறிகுறியாக உயர்மணி மகுடம் சூடி நிற்பவன் (A). சாதுக்களை நலியும் அரக்கர்களை அழிப்பதற்காகத் தாய்போல் கருணை காட்டும் சக்கரவர்த்தித் திருமகனாக அவதரித்தவன் (5). மலைகளைக் கொண்டு அணைகட்டி மலையின்மீது அரண் அமைத்த இலங்கை நகர் பொடிபட அம்பு தொட்டவன் (6). குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவன்; கம்சன் பூசையில் வைத்திருந்த வில்லை முறித்தவன்; மல்லர்களை அடர்த்தவன்; கஞ்ச னைக் காய்ந்தவன் (7). வாணனின் ஆயிரம் தோள்களும் அறுந்து விழும்படி திருவாழியைச் செலுத்தியவன்; திருவேங்கடமலையில் சேவை சாதிக்கும் வேங்கட கிருஷ்ணன் (8). மற்றும்.

களங்கனி வண்ணா! கண்ணனே என்றன் கார்முகி லேயென நினைந்திட்டு

உளங்கனிந் திருக்கும் அடியவர் தங்கள்

உள்ளத்து ஊதிய தேன் (9)

(கார்முகில் - காளமேகன்; கனிந்திருத்தல் - பரிபக்குவமாயிருத்தல்)